மசூதிகளில் சாமி சிலைகளை தேடி முஸ்லிம் மக்கள் வாழும் பகுதி யில் வன்முறையை கிளப்புவது, புல்டோசர் நடவடிக்கை, பசுவதை என்று கூறி முஸ்லிம் மக்களை அடித்துக் கொல் வது தான் ஆர்எஸ்எஸ் - பாஜகவின் முக்கிய செயல்பாடாக உள்ளது. இந்நிலையில், அரசுக்கு தெரிந்தே உத்தரப்பிரதேசத்தில் ஒவ்வொரு நாளும் 50,000 பசுக்கள் வெட்டப்படுவதாக அம் மாநில பாஜக எம்எல்ஏ நந்த் கிஷோர் குஜ்ஜார் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களி டம் அவர் மேலும் கூறுகையில், “உத்தரப்பிரதேசத்தில் ஆதித்யநாத் ஆட்சியில் தினமும் 50,000 பசுக்கள் வெட்டப்படுகின்றன. பசு நலனுக்காக ஒதுக்கப்பட்ட பணத்தை அதிகாரிகள் கொள்ளையடித்து வருகின்றனர். இதற்கெல்லாம் உத்தரப்பிரதேச தலை மைச் செயலாளர்தான் மூளையாக உள்ளார். முதல்வர் ஆதித்யநாத்துக்கு தெரிந்தே இந்த மோசடிச் சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன” என குற்றம் சாட்டி, இரண்டு தலைமைக் காவலர்கள் பசு வதைக்காக பணம் பறிக்கும் வீடியோ காட்சியையும் எம்எல்ஏ சமூகவலைத் தளங்களில் பகிர்ந்துள்ளார்.
பசுவதை பெயரில் பணம் பறிக்கும் பாஜக அரசு
மோடி பிரதமர் ஆன பின்பு பாஜக ஆளும் மாநிலங்களில், பசுவதை என்ற பெயரில் ஆர்எஸ்எஸ் - பாஜக ஆதரவு பெற்ற பசுக்குண்டர்கள் முஸ்லிம் மற்றும் தலித் மக்களை அடித்துக்கொல்வது வழக்கமான விஷயமாக மாறியுள்ளது. 4 நாட்களுக்கு முன்பு கூட உத்தரப்பிரதேச மாநிலத்தின் மொராதாபாத் பகுதியில் பசுவதை செய்ததாக பஜ்ரங் தளம் அமைப்பின் பசுக்குண்டர்கள் முஸ்லிம் இளைஞரை அடித்தே கொன்றனர். பசுவதையை வைத்து ஒரு பக்கம் பாஜக அரசியல் ஆதாயம் தேடினாலும் மறு பக்கம் அதனை வைத்து கல்லா கட்டி வருகிறது. உத்தரப்பிரதேசத்தில் பசுவதை செய்ய வேண்டும் என்றால் பணம் கொடுக்க வேண்டும் என்ற மிரட்டல் சம்பவங்களும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதன்மூலம் பசுவதை பெயரில் பணம் பறிக்கும் வேலையை யும் உத்தரப்பிரதேச பாஜக அரசு மேற் கொண்டு வருவது அம்பலமாகியுள்ளது.