states

img

3 குழந்தைகள் உட்பட 4 பேர் பலி ;  100க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதம்

3 குழந்தைகள் உட்பட 4 பேர் பலி ;  100க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதம்

தில்லியில் பலத்த காற்றுடன் கனமழை

இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிப்பு ; வெள்ளக்காடாய் மாறிய சாலைகள்

புதுதில்லி நாட்டில் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. இன்னும் சில நாட்களில் கத்தரி வெயில் ஆரம்பிக்க உள்ளது. இத்தகைய சூழலில் கடந்த சில வாரங்களாக கடுமையான வெயி லை எதிர்கொண்ட தில்லிக்கு வியா ழக்கிழமை மாலை அதீத கன மழைக்கான சிவப்பு எச்சரிக்கை (ரெட் அலர்ட்) விடுத்தது இந்திய வானிலை ஆய்வு மையம்.  இதனையடுத்து வெள்ளிக் கிழமை அதிகாலை முதல் பலத்த காற்றுடன் தில்லியின் பெரும்பா லான பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. பிரகதி மைதானம், பிதம்புரா, நஜாப்கர் உள்ளிட்ட பகுதிகளில் 60 முதல் 75 கிமீ வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. குறிப் பாக சப்தர்ஜங்கில் 77 மிமீ, லோதி சாலையில் 78 மிமீ, பிதம்புராவில் 32 மிமீ மற்றும் பாலம் பகுதியில் 30 மிமீ அளவில் பலத்த மழை பெய்தது.

வெள்ளக்காடாய்...

இந்த பலத்த மழையால் வெள் ளிக்கிழமை மாலை வரை தில்லி நகரின் முக்கிய சாலைகள் வெள்ளக் காடாக காட்சி அளித்தன. துவா ர்க்கா அண்டர்பாஸ், மிண்டோ சாலை, லஜபத் நகர் மற்றும் கான்பூர் புறவழிச்சாலை உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான அள வில் வெள்ளப்பெருக்கு ஏற்பட் டது. ஆங்காங்கே மரங்கள் சாய்ந்த தால் சாலைப் போக்குவரத்து கடு மையாக பாதிக்கப்பட்டது.  சப்தர் ஜங், லோதி சாலை, பிரகதி மை தானம், நஜாப்கர், பிதம்புரா உள்ளிட்ட பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் சீர் குலைந்தது.

4 பேர் பலி

கனமழை காரணமாக நஜாப்கர் அருகே கார்கரி நஹார் கிராமத்தில் வீடு இடிந்து விழுந்ததில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 3 குழந்தை கள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். பலத்த காற்றின் தாக்கத்தில் மரம்  விழுந்து, கிணற்று அறை இடிந்து விழுந்ததில் ஜோதி, அவரது மகன்கள் ஆரியன் (7), ரிஷப் (5),  குழந்தை பிரியான்ஷ் (7 மாதம்) ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஜோதியின் கணவர் அஜய் லேசான காயத்துடன் நல்வாய்ப்பாக உயிர்தப்பினார்.

விமானங்கள் தாமதம்

பலத்த காற்று மற்றும் கனமழை காரணமாக இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில், விமான சேவைகளும் பாதிக்கப் பட்டன. பெரும்பாலான விமானங் கள் ஜெய்ப்பூர், அகமதாபாத் விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன. அதே போல 100க்கும் மேற்பட்ட விமானங்களின் வருகை, புறப்பாடு தாமதமாகின.

மழை நீடிக்கும்

தில்லிக்கு விதிக்கப்பட்டு இருந்த அதீத கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை (ரெட் அலர்ட்) நீங்கியதாகவும், சனிக்கிழமை வரை கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.