states

தீக்கதிர் விரைவு செய்திகள்

ஜம்மு-காஷ்மீருக்கு  மாநில அந்தஸ்து

அமித் ஷா மழுப்பல் ஜம்மு-காஷ்மீருக்கு உறுதிய ளித்தபடி மாநில அந்தஸ்து வழங் கப்படும் என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் அவர் மேலும் கூறுகை யில்,”ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்த ஸ்து மீண்டும் வழங்கப்படும் என்று நாங் கள் உறுதியளித்துள்ளோம். அதே போல ஆரம்பத்திலிருந்தே, மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்று நாங்கள் கூறி வரு கிறோம். ஆனால் அது எப்போது என்பதை பொது மன்றத்தில் வெளியிட முடியாது” என மழுப்பலாகக் கூறினார்.

சத்தீஸ்கரில் நக்சல்கள் என 16 பேர் சுட்டுக்கொலை

பாஜக ஆளும் சத்தீஸ்கர் மாநி லம் சுக்மா-தந்தேவாடா மாவ ட்டங்களுக்கு இடையேயான எல்லைப் பகுதியில் சனிக்கிழமை அன்று காலை நக்சல்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும், இந்த மோதலில் 16 நக்சல்கள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் 16 நக்சல்க ளா? இல்லை, அப்பாவி பழங்குடி மக்க ளா?என உறுதியாக இன்னும் தகவல் வெளியாகவில்லை.

ஆந்திராவில் 42.6 டிகிரி கொளுத்தும் வெயில்

35 மண்டலங்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை நாட்டின் பல்வேறு இடங்களில் தற்போதே கத்தரி வெயிலுக்கு இணையாக வெயில் கொளு த்தி வருகிறது. குறிப்பாக தென் மாநிலங்க ளில் 35 முதல் 40 டிகிரி செல்சியஸ்க்கு அதிகமான அளவில் வெயில் மிரட்டி வரு கிறது. தமிழ்நாட்டின் ஒரு சில இடங்களில் லேசான அளவில் மழை பெய்து வருவ தால் வெயிலின் தாக்கம் அவ்வளவாக தெரியவில்லை. ஆனால் அண்டை மாநில மான ஆந்திராவில் வெப்ப அலை வீசி வருகிறது. இந்நிலையில், ஆந்திர மாநிலத்தின் 35 மண்டலங்களில் கடுமையான வெப்ப அலை வீச வாய்ப்புள்ளதாக மாநில பேரி டர் மேலாண்மை நிர்வாக இயக்குநர் ஆர். கூர்மநாத் எச்சரிக்கை விடுத்துள்ளார். விஜயநகரம் (9 மண்டலங்கள்), பார்வதி புரம் மன்யம் (12), ஸ்ரீகாகுளம் (6), அல்லூரி சீதாராம ராஜு, காக்கிநாடா (தலா 3), கிழக்கு கோதாவரி (2) உள்ளிட்ட 35 மண்டலங்களில் கடும் வெப்ப அலை வீச வாய்ப்புள்ளது” என அவர்  தெரி வித்துள்ளார். 42.6 டிகிரி வெயில் வெள்ளிக்கிழமை அன்று விஜயநக ரம், அனகப்பள்ளி (தலா 16 மண்டலங் கள்) மற்றும் கிழக்கு கோதாவரி, எலுரு,  குண்டூர் (தலா 17), பிரகாசம் மாவட்டத்தில் உள்ள டாடிசெர்லா கிராமத்திலும், ஒய்எஸ்ஆர் கடப்பாவில் உள்ள கமலா புரத்திலும் அதிகபட்ச வெப்பநிலை 42.6 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. அதே போல மாநிலம் முழுவதும் வெள்ளிக் கிழமை 181 இடங்களில் 40 டிகிரி செல்சி யஸைத் தாண்டி வெப்பநிலை பதிவாகி யுள்ளதாக ஆந்திரா பேரிடர் மேலா ண்மை தகவல் தெரிவித்துள்ளது. வெயில் மிக மோசமாக இருப்பதால் காலை  11 மணிக்கு மேல் மாலை 6 மணி வரை ஆந்திர மாநில சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டு வருகின்றன.