புதுதில்லி 1 ஏப்ரல் 2014 முதல் 30 செப்டம்பர் 2024 வரை இந்திய வங்கிகள் சுமார் ரூ.16,61,310 கோடி மதிப்பிலான கடனைத் தள்ளுபடி செய்துள்ளன. இந்தத் தகவலை சமூக ஆர்வலர் பிரஃபுல் பி.சர்தா தகவல் அறியும் சட்டத்தின் மூலம் பெற்றுள்ளார். அதேநேரத்தில் கடன் கொடுத்தவர்களிடம் இருந்து இந்திய வங்கிகள் வசூலித்த தொகை ரூ.2,69,795 கோடி (16 சதவீதம்) மட்டுமே. இது வரை இந்திய பொதுத்துறை வங்கிகள் ரூ.12,08,621 கோடியும், தனியார் துறை வங்கி கள் ரூ.4,46,669 கோடியும், நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் ரூ.6,020 கோடி கடன்களைத் தள்ளுபடி செய்துள்ளன. வசூலித்த 16 சதவீதத்தில் (ரூ.2,69,795) பொ துத்துறை வங்கிகள் ரூ.2,16,547 கோடியும் தனி யார் துறை வங்கிகள் ரூ.53,248 கோடியும் வசூ லித்துள்ளன. நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் வசூலித்த விவரங்களை தெரிவிக்கவில்லை. ஒன்றிய அமைச்சர் பங்கஜ் சௌத்ரி 2024 இல் மக்களவையில் கேள்வி ஒன்றிற்கு அளித்த பதிலில், பொதுத்துறை வங்கிகளான பஞ்சாப் நேஷனல் வங்கி, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தி யா ஆகியவை அதிகளவிலான கடனைத் தள்ளு படி செய்துள்ளன என தெரிய வந்துள்ளது. தனி யார் வங்கிகளில் எச்டிஎப்சி, ஆக்சிஸ் வங்கி, ஐசிஐசிஐ ஆகியவை அதிகளவிலான கடன் தள்ளுபடி செய்துள்ளன. பெரும்பாலான கடன்கள் தொழில்நுட்பம், வசூலிப்பது தொடர்பான காரணங்களுக்காக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என ரிசர்வ் வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கிகள் கடன்களை தள்ளுபடி செய்த பின்னரும் கூட, கடன்களை வசூலிக்கும் உரிமையை தக்க வைத்துக் கொள்கின்றன எனவும் கடன் தள்ளுபடி என்பது கடன் வாங்குபவர்களை அவர்களின் திரும்பச் செலுத்த வேண்டிய கடமைகளிலிருந்து விடுவிக்காது எனவும் ரிசர்வ் வங்கி தரப்பில் கூறப்படுகின்றது. எனினும் தள்ளு படிக்கு பிறகும் கடனை வசூலிக்கும் உரிமை வங்கிகளிடம் இருந்தாலும் எந்த கார்ப்பரேட் நிறு வனத்திடமும் வங்கிகள் பணத்தை முழுமை யாக வசூலிக்கவில்லை என்பதே எதார்த்தம். 2024 ஆகஸ்ட் மாத நிலவரப்படி கடந்த ஐந்து ஆண்டுகளில் தள்ளுபடி செய்யப்பட்ட கடன்களில் வெறும் 18.7 சதவீதத்தை மட்டுமே வங்கிகள் திரும்பப் பெற்றுள்ளன. காங்கிரஸ் ஆட்சியில் இருந்த 2003 முதல் 2014 வரையிலான காலத்தில் ஆண்டுக்கு ரூ.20,000 கோடி தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால் பாஜக ஆட்சியில் ஆண்டொன்றுக்கு ரூ.1.60 லட்சம் கோடி தள்ளுபடி செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.