தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் உள்பட 14 பேர் பலி
கொல்கத்தா ஓட்டலில் தீ விபத்து
கொல்கத்தாவில் ஓட்டல் ஒன் றில் ஏற்பட்ட தீ விபத்தில் தமிழ்நாட்டைச்சேர்ந்த 3 பேர் உள்பட 14 பேர் உயிரிழந்தனர். புர்ராபஜார் மெச்சுவா பழச்சந்தை பகுதியில் ஓட்டல் ஒன்று அமைந்துள் ளது. இந்த ஓட்டலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதை அறிந்த ஊழியர் ஒருவர் தீயில் இருந்து தப்பிக்க, மாடி யில் இருந்து குதித்தபோது படுகாயம டைந்து இறந்தார். தீ விபத்து குறித்து அறிந்த தீயணைப்புத் துறையினர் உட னடியாக சம்பவ இடத்துக்கு சென்று தீயை அணைத்தனர். சிறிது நேர போராட் டத்துக்கு பின்னர் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து விசாரிக்க ஒரு சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இத னிடையே இந்த தீ விபத்தில் தமிழகத் தைச் சேர்ந்த 3 பேர் பலியான விவரம் தெரிய வந்துள்ளது. கரூர் மாவட்டம், உப்பிடமங்கலத்தைச் சேர்ந்த தொழில திபர் பிரபு மற்றும் அவரது குழந்தைகள் உட்பட 3 தமிழர்கள் உயிரிழந்துள்ளனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் கொல்கத்தாவில் உள்ள நட்சத்திர விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரி ழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த முத்து கிருஷ்ணன், குழந்தைகள் தியா, ரிதன் ஆகியோர் மற்றும் பலரும் உயிரிழந்தனர் என்ற செய்தியறிந்து மிகவும் வருந்தி னேன்; நெஞ்சம் கலங்கினேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, இத் துயர்மிகு நேரத்தில் அவர்களது குடும்பத்தினருக்கு நமது அரசு துணை நிற்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என கூறப்பட்டுள்ளது.