states

குஜராத் மாடலின் புல்டோசர் அடாவடி வீதிகளில் வசிக்கும் 12,000 குடும்பங்கள்

குஜராத் மாடலின் புல்டோசர் அடாவடி வீதிகளில் வசிக்கும் 12,000 குடும்பங்கள்

அகமதாபாத் பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தின் அகமதா பாத் மாநகராட்சி நிர்வா கம் கடந்த 2025 ஏப்ரல் மாதம் சந்தோலா ஏரிப் பகுதியில் (சியாசத் நகர்) சட்டவிரோத ஆக்கிரமிப்பு என்ற பெயரில் புல்டோசர் நடவ டிக்கை மேற்கொண்டது. சியாசத் நகரில் முஸ்லிம் மக்கள் பெரும் ்பான்மையாக வசிக்கும் நிலையில், முன்னறிவிப்பின்றி நீதிமன்ற உத்த ரவை சுட்டிக்காட்டி, சுமார் 12,000 வீடுகள் ஒரே நேரத்தில் இடிக்கப் பட்டன. வீடுகள் இடிக்கப்பட்டு ஒரு வரு டத்தை நெருங்கியுள்ள நிலையில், வீடுகளை இழந்த முஸ்லிம் மக்கள் தங்குவதற்கு இடமின்றி தவிக் கின்றனர். ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வெட்டவெளியிலும், ஆட்டோ ரிக்சாக்களிலும். இன்னும் இடிபாடுகளிலும் பெண்கள், குழந் தைகளுடன் வசித்து வருகின்றனர். வங்கதேசிகள் வீட்டை இழந்த மின்ஹாஜுத் என்பவர் தனது குழந்தைகளை இடிபாடுகளுக்கு அருகிலேயே தூங்க வைத்து “தி வயர்” செய்தி யாளரிடம் கூறுகையில்,“திடீரென வீடுகள் இடிக்கப்பட்டன. நாங்கள் எங்கே போவோம்? எங்களிடம் வேறு வழியில்லை. அதனால் சிதைந்த இடிபாடுகளில் வெயில், மழை, குளிரில் குழந்தைகளோடு திண்டாடி வருகிறோம். வீடுகள் இடித்த பின்பு ஒரு கும்பல் (இந்துத்துவா) என்னை ‘வங்க தேசி’ என்று அழைத்தார்கள். என்  மனைவியை இழுத்துச் சென்றார் கள், அவளையும் வங்கதேசி என்று கூறி கோஷங்களை எழுப்பி னார்கள். பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்கள் மட்டுமே எங்களைக் காப்பாற்றின” என்று அவர் கண்ணீ ரோடு கூறினார். இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கை கையா ண்டு வரும் மூத்த வழக்கறிஞர் ஆனந்த் யக்னிக் கூறுகையில், “வீடுகள் இடிக்கும் போது மக்க ளுக்கு முறையான கால அவகா சம் வழங்கப்படவில்லை. இது அரசியலமைப்புச் சட்டம் 14 மற்றும் 21இன் கீழ் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகும். உரிய ஆவணங்கள் இல்லாதவர்கள் என்ற சந்தே கத்தின் பேரில் குடும்ப உறுப்பி னர்கள் தடுப்புக் காவலில் வைக்கப் பட்டுள்ளனர்” என அவர் குற்றம் சாட்டினார்.