‘பாஜக எங்கெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அங்கெல்லாம் ரத்து ஆறு ஓடுகிறது’
நாடாளுமன்றத்தில் சிபிஎம் எம்.பி., ஏ.ஏ.ரஹீம் குற்றச்சாட்டு
பாஜக எங்கெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அங்கெல்லாம் ரத்து ஆறு ஓடுகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்க ளவை உறுப்பினர் ஏ.ஏ.ரஹீம் குற்றம் சாட்டினார். அண்மையில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வின்போது ஏப்ரல் 3 அன்று மணிப்பூர் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை நீட்டிக்கச் செய்வதற்கான தீர்மானம் விவா தத்திற்கு வந்தது. அதில் பங்கேற்று ஏ.ஏ.ரஹீம் பேசியதாவது: இப்போது அதிகாலை 3.15 எனக் கடிகாரம் காட்டுகிறது. மணிப் பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி யை நீட்டிப்பதற்காக தூங்காமல் இந்த விவாதத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். ஆனால் மணிப்பூர் மாநில மக்கள் 2023 மே மாதத்திலிருந்தே தூங்க முடியா மல் தத்தளித்துக் கொண்டிருக்கி றார்கள். ‘மணிப்பூரில் எத்தனை மக்கள் கொல்லப்பட்டார்கள், எத் தனை வீடுகள் இடித்துத் தரை மட்டமாக்கப்பட்டன, எத்தனை தேவாலயங்கள் தீக்கிரையாக் கப்பட்டன, எத்தனை பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு உள் ளாக்கப்பட்டார்கள் என்பதைக் கூற அரசு மறுக்கிறது. முன்பு குஜராத் இப்போது மணிப்பூர்... நம் பிரதமர் நரேந்திர மோடி எங்கே இருக்கிறார்? ஏன் இது வரை அவர் மணிப்பூருக்கு சென்று பார்க்கவில்லை? குஜராத்தின் தொடர்ச்சியே மணிப்பூர். இதுதான் எங்கள் கட்சியின் நிலைபாடு ஆகும். சங் பரிவாரத்தின் பரிசோ தனைக் கூடமாக மணிப்பூர் மாறியி ருக்கிறது. மணிப்பூரில் நடை பெற்ற அனைத்தும் திட்டமிடப் பட்டவையே. அங்கே அவர்கள் ஒரு குறிப்பிட்ட மதத்தினரை குறி வைத்துத் தாக்கி இருக்கிறார்கள். முன்பு அவர்கள், குஜராத்தில் ஒரு குறிப்பிட்ட மதத்தினரை குறி வைத்துத் தாக்கினார்கள். இங்கே வேறொரு மதத்தினரைக் குறி வைத்துத் தாக்கி வருகிறார்கள். மணிப்பூர் கலவரம் குறித்து அர சாங்கம் என்ன சொல்கிறது? இரு இனக் குழுவினருக்கிடையே மோதல்கள் நடைபெற்று வருவ தாகக் கூறுகிறது. நான் அதனை ஒப்புக்கொள்கிறேன். ஆனால், அதே சமயத்தில், இந்தத் தாக்கு தல்களின்போது கிறிஸ்தவ தேவா லயங்கள் பிரதான இலக்காக இருந்தது ஏன் என்று நான் கேட்க விரும்புகிறேன்.
தேவாலயங்கள் மட்டும் தாக்குதலுக்குள்ளானதேன்?
நான் மணிப்பூருக்குச் சென்றி ருந்தேன். ‘இந்தியா’ கூட்டணியின் ஓர் அங்கமாக நான் அங்கே சென்றி ருந்தேன். விடுதிகள், பள்ளிக் கூடங்கள் உட்பட கிறிஸ்தவ நிறுவனங்கள் பல தாக்குதல்க ளுக்கு உள்ளாகியிருந்ததை நான் பார்த்தேன். இத்தாக்குதல்கள் அனைத்தும் நன்கு திட்டமிட்டு நடத்தப்பட்டவைகளாகும். வீடு களில் பயன்படுத்தும் எரிவாயு சிலிண்டர்களைப் பயன்படுத்தி தேவாலயங்கள் தகர்க்கப்பட்டி ருக்கின்றன.
ஜபல்பூரிலும்
மணிப்பூரில் மட்டும் இது போன்று நடக்கவில்லை. ஜபல்பூரி லும் நேற்று இதுபோல் நடந்திருக்கி றது. நாடு முழுதும் கிறிஸ்தவர்க ளுக்கு எதிராக தாக்குதல்கள் அதிகரித்துக் கொண்டிருப்பதை நாம் பார்க்கிறோம். இங்கே நான் முன்பே குறிப்பிட்டதைப்போல, அரசாங்கம் கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடத்திடும் தாக்குதல் தொடர்பான தரவுகளை அளிக்கத் தயாராயில்லை. இந்த அவையில் எனக்கு ஒரு கசப்பான அனுபவம் உண்டு. இந்தப் பட்ஜெட் கூட்டத்தொட ரின்போது கிறித்தவர்களுக்கு எதி ராக நடைபெற்றுவரும் தாக்குதல் கள் குறித்து நான் ஓர் கேள்வி கேட்டிருந்தேன். அதற்கு அரசாங் கம் எங்களிடம் தரவுகள் இல்லை என்று பதில் அளித்திருக்கிறது. நான் என் உரையை நிறைவு செய்வதற்கு முன் நாரி சக்தி (பெண்களின் சக்தி) குறித்து பேச விரும்புகிறேன். மணிப்பூரில் பெண் கள் சாலையில் நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்துச் செல்லப் பட்டதை எவரொருவரும் மறக்க முடியாது. (மணி அடிக்கப்பட்டது.) நீங்கள் எங்கெல்லாம் ஆட்சிக்கு வருகிறீர்களோ, அங்கெல்லாம் சாலைகளில் ரத்த ஆறு ஓடுகிறது.