states

img

‘அமெரிக்காவுடன் சமரச வர்த்தக உடன்படிக்கை செய்யும் முதல் நாடாக இந்தியா இருக்கும்’

‘அமெரிக்காவுடன் சமரச வர்த்தக உடன்படிக்கை செய்யும் முதல் நாடாக இந்தியா இருக்கும்’ 

புதுதில்லி/வாஷிங்டன்  அமெரிக்காவின் வரிவிதிப்பு தொடர்பான பேச்சுவார்த் தைகள் இந்தியாவுடன் “சிறப்பாக நடந்து வருகின்றன” என்றும் இந்தியாவுடன் விரை வில் வர்த்தக ஒப்பந்தத்தை அமெ ரிக்காவால் மேற்கொள்ள முடியும் என்றும் டொனால்டு டிரம்ப் தெரி வித்துள்ளார்.  இந்தியா மீது 26 சதவீத பரஸ்பர வரி உட்பட பல நாடுகள் மீது டிரம்ப் வரி விதித்திருந்தார். பிறகு இந்த வரிகளை 90 நாட்களுக்கு இடைநிறுத்திவைத்துள்ளார். வரிகளின் மூலமாக பிறநாடு களை மிரட்டி தன் நாட்டுடன் வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்ள வைக்கவும், தங்கள் பொருட்கள் மீதான வரிகளை குறைக்க வைப்ப தற்கான முயற்சிகளை இந்த 90 நாட்களில் செய்வதற்கான முயற்சி களை அமெரிக்கா எடுத்து வரு கின்றது.  இதன் ஒரு பகுதியாக துணை ஜனாதிபதி, அமெரிக்கா வெளியுற வுத்துறை செயலர், கருவூலத் துறை  செயலர் என பல முக்கிய அதிகாரிகள் பல நாடுகளுக்கு பய ணித்து வரிகளைக் குறைப்பது, அமெரிக்கப் பொருட்களை இறக்கு மதி செய்ய வைப்பது என வர்த்தக  ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில் தான் கருவூ லத்துறை  செயலர் ஸ்காட் பெசன்ட் வர்த்தக ஒப்பந்தத்தில் நாங்கள் கையெழுத்திடும் முதல் நாடாக இந்தியா இருக்கும் என தெரி வித்துள்ளார்.  அமெரிக்க ஜனாதிபதி  டிரம்ப்  கொடுத்த செய்தியாளர் சந்திப்பி லும்  “நாங்கள் இந்தியாவுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்வோம் என்று நினைக்கிறேன்” என தெரி வித்துள்ளார். மேலும் பேசிய அவர் “உங்களுக்குத் தெரியும், பிரதமர் மோடி மூன்று வாரங்களுக்கு முன்பு அமெரிக்காவில் இருந்தார். அவர் கள் எங்களுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ள விரும்புகிறார்கள்” எனவும் கூறினார்.   அமெரிக்க வர்த்தகச் செயலா ளர் ஹோவர்ட் லுட்னிக், இந்தியா வுடன் அமெரிக்கா  ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை எட்டியுள்ளோம். எனினும் அதை அறிவிப்பதற்கு இந்திய அரசாங்கத்தின் இறுதி ஒப்புதலுக்காகக் காத்திருக்கின் றோம் என தெரிவித்ததை தொ டர்ந்து டிரம்ப் இவ்வாறு பேசி யுள்ளார்.   ஹோவர்ட் லுட்னிக் பேசிய போது, அவருக்கும் இந்திய தரப் பில் பங்கேற்ற நபர்களுக்கும் இடை யிலான பேச்சுவார்த்தை முடிந்து விட்டது. எனினும் இந்திய பிரதமர் மற்றும்  நாடாளுமன்றம் ஒப்புதல் வர வேண்டும் என காத்துக் கொண்டு இருப்பதாக அவர் தெரி வித்துள்ளார். இந்நிலையில் இன்னும் சில நாட்களில் இந்தியா அமெரிக்கா வுக்கு இடையே ஒரு வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகலாம் என கூறப்பட்டுள்ளது. இந்தியாவின் சந்தை மற்றும் மனித வளம் அமெரிக்காவிற்கும் அந்நாட்டு நிறுவனங்களுக்கும் மிக முக்கியத் தேவையாக உள்ளது. இதனால் வரும் நாட்களில் அமெ ரிக்கப் பொருட்கள் மீதான வரி களை இந்தியா குறைக்கும் என கூறப்படுகின்றது. குறிப்பாக அமெரிக்காவின் விவசாய மற்றும் பண்ணைப் பொ ருட்களான சோயா, உறைந்த இறைச்சி மற்றும் மீன், கோழி மற்றும் பல பழங்கள் மற்றும் பழச்சாறுகள் உள்ளிட்ட பல்வேறு விவசாயப் பொருட்களை இந்திய சந்தையில் திணிக்க அமெரிக்கா முயற்சித்து வருகின்றது. சமீபத்தில் அமெ ரிக்கா துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் இந்தியா வந்த போது இது குறித்தான பேச்சுவார்த்தை இந்திய அதிகாரிகளுடன் நடை பெற்றுள்ளது.புதுதில்லி/வாஷிங்டன்  அமெரிக்காவின் வரிவிதிப்பு தொடர்பான பேச்சுவார்த் தைகள் இந்தியாவுடன் “சிறப்பாக நடந்து வருகின்றன” என்றும் இந்தியாவுடன் விரை வில் வர்த்தக ஒப்பந்தத்தை அமெ ரிக்காவால் மேற்கொள்ள முடியும் என்றும் டொனால்டு டிரம்ப் தெரி வித்துள்ளார்.  இந்தியா மீது 26 சதவீத பரஸ்பர வரி உட்பட பல நாடுகள் மீது டிரம்ப் வரி விதித்திருந்தார். பிறகு இந்த வரிகளை 90 நாட்களுக்கு இடைநிறுத்திவைத்துள்ளார். வரிகளின் மூலமாக பிறநாடு களை மிரட்டி தன் நாட்டுடன் வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்ள வைக்கவும், தங்கள் பொருட்கள் மீதான வரிகளை குறைக்க வைப்ப தற்கான முயற்சிகளை இந்த 90 நாட்களில் செய்வதற்கான முயற்சி களை அமெரிக்கா எடுத்து வரு கின்றது.  இதன் ஒரு பகுதியாக துணை ஜனாதிபதி, அமெரிக்கா வெளியுற வுத்துறை செயலர், கருவூலத் துறை  செயலர் என பல முக்கிய அதிகாரிகள் பல நாடுகளுக்கு பய ணித்து வரிகளைக் குறைப்பது, அமெரிக்கப் பொருட்களை இறக்கு மதி செய்ய வைப்பது என வர்த்தக  ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில் தான் கருவூ லத்துறை  செயலர் ஸ்காட் பெசன்ட் வர்த்தக ஒப்பந்தத்தில் நாங்கள் கையெழுத்திடும் முதல் நாடாக இந்தியா இருக்கும் என தெரி வித்துள்ளார்.  அமெரிக்க ஜனாதிபதி  டிரம்ப்  கொடுத்த செய்தியாளர் சந்திப்பி லும்  “நாங்கள் இந்தியாவுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்வோம் என்று நினைக்கிறேன்” என தெரி வித்துள்ளார். மேலும் பேசிய அவர் “உங்களுக்குத் தெரியும், பிரதமர் மோடி மூன்று வாரங்களுக்கு முன்பு அமெரிக்காவில் இருந்தார். அவர் கள் எங்களுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ள விரும்புகிறார்கள்” எனவும் கூறினார்.   அமெரிக்க வர்த்தகச் செயலா ளர் ஹோவர்ட் லுட்னிக், இந்தியா வுடன் அமெரிக்கா  ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை எட்டியுள்ளோம். எனினும் அதை அறிவிப்பதற்கு இந்திய அரசாங்கத்தின் இறுதி ஒப்புதலுக்காகக் காத்திருக்கின் றோம் என தெரிவித்ததை தொ டர்ந்து டிரம்ப் இவ்வாறு பேசி யுள்ளார்.   ஹோவர்ட் லுட்னிக் பேசிய போது, அவருக்கும் இந்திய தரப் பில் பங்கேற்ற நபர்களுக்கும் இடை யிலான பேச்சுவார்த்தை முடிந்து விட்டது. எனினும் இந்திய பிரதமர் மற்றும்  நாடாளுமன்றம் ஒப்புதல் வர வேண்டும் என காத்துக் கொண்டு இருப்பதாக அவர் தெரி வித்துள்ளார். இந்நிலையில் இன்னும் சில நாட்களில் இந்தியா அமெரிக்கா வுக்கு இடையே ஒரு வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகலாம் என கூறப்பட்டுள்ளது. இந்தியாவின் சந்தை மற்றும் மனித வளம் அமெரிக்காவிற்கும் அந்நாட்டு நிறுவனங்களுக்கும் மிக முக்கியத் தேவையாக உள்ளது. இதனால் வரும் நாட்களில் அமெ ரிக்கப் பொருட்கள் மீதான வரி களை இந்தியா குறைக்கும் என கூறப்படுகின்றது. குறிப்பாக அமெரிக்காவின் விவசாய மற்றும் பண்ணைப் பொ ருட்களான சோயா, உறைந்த இறைச்சி மற்றும் மீன், கோழி மற்றும் பல பழங்கள் மற்றும் பழச்சாறுகள் உள்ளிட்ட பல்வேறு விவசாயப் பொருட்களை இந்திய சந்தையில் திணிக்க அமெரிக்கா முயற்சித்து வருகின்றது. சமீபத்தில் அமெ ரிக்கா துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் இந்தியா வந்த போது இது குறித்தான பேச்சுவார்த்தை இந்திய அதிகாரிகளுடன் நடை பெற்றுள்ளது.