மணிப்பூர் இளம்பெண் படுகொலை சிபிஎம்
இரங்கல் மணிப்பூரில் நடந்த வன்முறையின் போது கடத்தப்பட்டு கும்பல் பாலியல் வன்கொடுமைக்கு (2023ஆம் ஆண்டு மே 15 அன்று) ஆளாக் கப்பட்ட குக்கி பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த 18 வயது இளம்பெண், நீண்ட நாள் உடல்நலக்குறைவால் பாதிக்கப் பட்டு ஜனவரி 10 அன்று உயிரிழந்தார். இந்நிலையில், மணிப்பூர் இளம் பெண் படுகொலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி இரங்கல் தெரிவித்துள் ளது. இதுதொடர்பாக சிபிஎம் மத்தி யக்குழு தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில், “மணிப்பூரில் கும்பல் பாலியல் வன் கொடுமையால் பாதிக்கப்பட்ட குக்கி பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண், தனக்கு ஏற்பட்ட கடுமையான காயங்கள் காரணமாக உயிரிழந்தது மிகுந்த வருத்தமளிக்கிறது. அவர் நீதிக்காக இரண்டு ஆண்டுகள் போராடினார். ஆனால் அவருக்கு நீதி கிடைக்க வில்லை. இது நீதித்துறை தாமதத்தின் மீதான கடுமையான குற்றச்சாட்டாகும். அவரது மறைவுக்கு நாங்கள் இரங்கல் தெரிவிப்பதோடு, அவரது குடும்பத்தின ருக்கும் நண்பர்களுக்கும் எங்களது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என அதில் கூறப் பட்டுள்ளது.