நிதீஷ் குமார், தனது சட்டமேலவை உறுப்பினர் (MLC) பதவியை இன்று ராஜினாமா செய்தார்.
நிதிஷ் குமார், கடந்த ஆண்டு பீகார் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக பதவியேற்றுகொண்டார். இதை தொடர்ந்து கடந்த மாதம் அவர் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், அவர் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக செய்திகள் வெளியாகின. இதை தொடர்ந்து, கடந்த மார்ச் 16-ஆம் தேதியன்று அவர் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிலையில், நிதீஷ் குமார், தனது சட்டமேலவை உறுப்பினர் (MLC) பதவியை இன்று ராஜினாமா செய்தார்.
அம்மாநில சட்டமேலவைத் தலைவர் அவதேஷ் நரேன் சிங், நிதீஷ் குமாரின் ராஜினாமாவை உறுதிப்படுத்தியுள்ளார்.
