கிருஷ்ணகிரி:
கர்நாடகா மாநில அரசு போக்குவரத்துத் துறை ஊழியர்கள் பணி நிரந்தரம் மற்றும் ஊதியக் குழு பரிந்துரையை காலம் கடத்தாமல் உடனே அமல்படுத்தக் கோரி 7 ஆம் தேதி முதல் மாநிலம் தழுவிய காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் காரணமாக தமிழகத்திற்குள் கர்நாடகா அரசு பேருந்துகள் எதுவும் வரவில்லை. குறிப்பாக ஓசூருக்கு வரும் பேருந்துகள் எதுவும் இயக்கப்படவில்லை என்பதால் ஓசூர் பேருந்து நிலையத்தில் பெங்களூரு செல்லும் பேருந்துகள் நிறுத்தப்படும் பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது.தமிழக அரசு பேருந்துகள் வழக்கம் போல் சென்று வருகின்றன. கர்நாடக அரசு பேருந்துகள் 100 சதவீதம் இயக்கப்படாததால் கர்நாடக பாஜக எடியூரப்பா அரசு தொழிலாளர்கள், ஊழியர்கள் கோரிக்கைகளை சுமுகமாக பேசி தீர்ப்பதற்கு பதிலாக தனியார் ஆட்களை வைத்து பேருந்துகளை இயக்க முயற்சித்து வருவதாக தொழிலாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனிடையே வெள்ளியன்று வேலை நிறுத்தம் 4-வது நாளாக தொடர்ந்து நடைபெற்றது.