பெங்களூரு:
சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப் பட்டு இருந்த சசிகலா தண்டனைக்காலம் முடிந்து செவ்வாயன்று (ஜன.27) விடுதலையானார்.
கொரோனாவால் பாதிக்கப் பட்டு அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவருக்கு கொரோனா பாதிப்புகள் முற்றிலுமாக நீங்கிவிட்டது. இதையடுத்து அவரை தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு டாக்டர்கள் மாற்றியுள்ளனர். கொரோனா வழிகாட்டுதல்படி சசிகலாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது.சிறைவாசம் முடிந்தாலும் சசிகலா விக்டோரியா அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெறுவார் என அவரது வழக்கறிஞர் செந்தூர் பாண்டியன் தெரிவித்தார்.