பெங்களூரு:
கர்நாடக மாநிலம் ஹபாலியில் உள்ள மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷியின் வீட்டு முன்பு, பெண் ஒருவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரகலாத் ஜோஷியிடம் முறையிடுவதற்காக, பலமுறை வீட்டுக்குச்சென்றும் அவரைச் சந்திப்பதற்குஉதவியாளர்கள் அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதில்விரக்தியடைந்தே அந்தப் பெண் தற்கொலைக்கு முயன்றதாக செய்திகள் வெளியாகியுள்ளன.சம்பந்தப்பட்ட பெண்ணின் வீடு,2019ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத் தில் சேதமடைந்து விட்ட நிலையில், அந்த வீட்டைச் சீரமைத்துத்தர வேண்டும் என்ற கோரிக்கைக்காக அவர் அமைச்சரைச் சந்திக்க தொடர்ந்து முயன்றுள்ளார்.உதவியாளர்களையும் அணுகியுள்ளார். ஆனால், கடைசிவரை அமைச்சர் தன்னைச் சந்திக்க மறுத்து விட்டதால், விரக்தியடைந்த அந்தப் பெண்,விஷம் குடித்துள்ளார். இந்தச் சம்பவம் கர்நாடகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,அமைச்சர் பிரகலாத் ஜோஷி தற் போது விளக்கம் அளித்துள்ளார். அதில், “இரண்டு மாதங்களுக்கு முன்பே,அந்தப் பெண்ணின் விண்ணப்பத்தை சரிபார்ப்பதற்காக அதிகாரிகளிடம் அனுப்பி விட்டதாகவும், ஆனால், அவர் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்தது வருத்தத்திற்கு உரியது” என்றும் பட்டும் படாமல் அவர்பதிலளித்துள்ளார்.
வீடுகளை சீரமைக்க ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றுமாநில பாஜக அரசு அறிவித்திருந்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 50 ஆயிரம் ரூபாயை மட் டுமே இதுவரை வழங்கியுள்ளனர்.