states

img

ஐபிஎல் மெகா ஏலத்தில் இதுவரை தேர்வு செய்த வீரர்களின் பட்டியல்  

ஐபிஎல் மெகா ஏலத்தில் அணிகள் இதுவரை தேர்வு செய்த வீரர்களின் பட்டியல் வெளியாகி உள்ளது.    

ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் மொத்தம் பத்து அணிகள் பங்கேற்க உள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய 8 அணிகளுடன் புதிதாக லக்னோ மற்றும் அகமதாபாத் என இரண்டு புதிய அணிகள் இந்த சீசனில் இணைந்துள்ளன. ஐபிஎல் 2022 மெகா ஏலம் இன்றும் நாளையும் நடைபெறும்.  இந்த மெகா ஏலத்திற்கு முன்னதாக ஒவ்வொரு அணியும் அதிகபட்சம் 4 வீரர்களை தக்கவைத்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. அதே நேரத்தில் புதிய அணிகள் 3 வீரர்களை தேர்வு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. அதன்படி ஏலத்தில் பங்கேற்பதற்காக பதிவு செய்த 1214 வீரர்களிலிருந்து மொத்தம் 590 வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.    

இந்நிலையில் ஐபிஎல் மெகா ஏலத்தில் அணிகள் இதுவரை தேர்வு செய்த வீரர்களின் பட்டியல் வெளியாகி உள்ளது.    

* இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினை ரூ.5 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது.    

* இந்திய வீரர் ஷிகர் தவானை, ரூ.8.25 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலம் எடுத்தது.      

* இந்திய வீரர் ஸ்ரேயாஸ் அய்யரை, ரூ.12.25 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலம் எடுத்தது.      

* இந்திய வீரர் முகமது சமியை, ரூ.6.25 கோடிக்கு குஜராத் டைட்டன்ஸ் அணி ஏலம் எடுத்தது.      

* இந்திய வீரர் மனீஷ் பாண்டேவை, ரூ.4.60 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்ணி ஏலம் எடுத்தது.      

* இந்திய வீரர் ராபின் உத்தப்பாவை, ரூ.2 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலம் எடுத்தது.    

* சென்னை அணியில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் வீரர் வெய்ன் பிராவோவை ரூ.4.40 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலம் எடுத்தது.    

* தென்னாப்பிரிக்க வீரர் காகிசோ ரபாடாவை, ரூ.9.25 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலம் எடுத்தது.    

* ஆஸ்திரேலியா வீரர் பாட் கம்மின்ஸ்-ஐ, ரூ.7.25 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலம் எடுத்தது.    

* நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிரெண்ட் போல்ட் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் ரூபாய் 8 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.    

* சென்னை அணியில் விளையாடிய தென்னாப்பிரிக்க வீரர் பாப் டூ ப்ளெசிஸ், ரூ.7 கோடிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஏலம் எடுத்தது.    

* ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர் டேவிட் வார்னர் 6.25 கோடிக்கு டெல்லி கேப்பிடள்ஸ் அணி ஏலம் எடுத்தது.    

* தென் ஆப்ரிக்க வீரர் குயின்டன் டி காக் 6.75 கோடி ரூபாய்க்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஏலம் எடுத்தது.    

* வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஹெட்மையரை ரூ.8.50 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலம் எடுத்தது.    

* இங்கிலாந்து வீரர் ஜேசன் ராய்யை அடிப்படை விலையான ரூ. 2 கோடிக்கு குஜராத் டைட்டன்ஸ் அணி ஏலம் எடுத்தது.      

* இந்திய வீரர் தேவ்தத் படிக்கல்லை ரூ.7.75 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலம் எடுத்தது.      

* இந்திய வீரர் நிதிஷ் ராணாவை, ரூ.8 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலம் எடுத்தது.    

* வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஜேசன் ஹொல்டரை ரூ.8.75 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஏலம் எடுத்தது.    

* இந்திய வீரர் ஹர்ஷல் பட்டேலை ரூ.10.75 கோடிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஏலம் எடுத்தது.    

* இந்திய வீரர் தீபக் ஹூடாவை ரூ.5.75 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஏலம் எடுத்தது.    

ஐபிஎல் மெகா ஏலத்தில் இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா, தென்னாப்பிரிக்க வீரர் டேவிட் மில்லர் மற்றும் வங்காளதேச வீரர் ஷகிப் அல் ஹசன் ஆகியோரை வாங்க எந்த அணி நிர்வாகமும் முன் வரவில்லை.