மாநிலங்களவைத் தேர்தல் கமல்ஹாசன், திமுக வேட்பாளர்கள் மனுத் தாக்கல்
மாநிலங்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி சார்பில் போட்டிடும் மநீம தலைவர் கமல்ஹாசன், திமுக வேட்பாளர்கள் கவிஞர் சல்மா, பி. வில்சன், எஸ்.ஆர். சிவலிங்கம், ஆகியோர் வெள்ளியன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்தனர். துணை முதலமைச்சர் உதயநிதி, டி.ஆர். பாலு எம்.பி., தமிழக அமைச்சர்கள் எ.வ. வேலு, ஆர். ராஜேந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், விசிக தலைவர் தொல். திருமாவளவன், காங்கிரஸ் தலைவர் கு.செல்வபெருந்தகை எம்எல்ஏ உள்ளிட்டோர் வேட்புமனுத் தாக்கல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். (செய்தி : 5)