பெங்களூரு:
கர்நாடகத்தில் யஷ்வந்தா என்ற பெண் ஐஏஎஸ் அதிகாரியைத் தாக்கிய பாஜக எம்எல்ஏ சதீஸ் ரெட்டிமீது எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும் என்று ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கத்தினர் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
இதுதொடர்பாக, முதல்வர் எடியூரப்பாவுக்கு கடிதம் ஒன்றை அவர்கள் எழுதியுள்ளனர். அதில்,கூறியிருப்பதாவது:
கொரோனா தொற்று பாதிப் பால், கர்நாடக மாநிலம் கடுமையான பாதிப்பைச் சந்தித்துக் கொண்டிருக்கும் நிலையில், நிலைமையைச் சமாளிக்க அனைத்து ஐஏஎஸ் அதிகாரிகளும் தங்களின்முழு ஒத்துழைப்பை அளித்து வருகின்றனர். சக்தியை மீறி அதிகஅளவில் அவர்கள் உழைக்கின்றனர்.இந்நிலையில் எங்கள் சங்க உறுப்பினர்களில் ஒருவரான வி.யஷ்வந்தா என்பவர் மீது பொம்மனஹள்ளியில் ஏப்ரல் 30 அன்று தாக்குதல் நடந்துள்ளது. இவ்வாறு அவர்தாக்கப்பட்டதற்குக் கர்நாடக ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கம் தங் கள் கடும் எதிர்ப்பை தெரிவிக்க விரும்புகிறது.தனியார் மருத்துவமனைகளில் இருந்து அதிக படுக்கைகள் பெற அமைக்கப்பட்ட குழுவில் யஷ்வந்தா இடம் பெற்றிருந்தார். சட்ட அடிப்படையில் தனியார் மருத்துவமனைகளில் இருந்து இந்த அதிகாரிகள் குழு படுக்கைகளைப் பெற்றது. இவ்வாறு பெற்றபடுக்கைகளை மாநில சட்டப் பேரவை உறுப்பினரை சேர்ந்தவர்களுக்கு அளிக்க ஐஏஎஸ் அதிகாரி யஷ்வந்தாவிற்கு அழுத்தம் தரப்பட்டது. அதற்கு அவர் ஒப்புக் கொள்ளாததால் பொதுமக்கள் முன்னிலையில் தாக்குதல் நடத்தப்பட்டு அதை வீடியோ படமாகவும் ஆக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், அதிகாரி யஷ்வந்தா மீதான தாக்குதலுக்கு, எங்களின் எதிர்ப்பை நாங்கள் தெரிவிப்பதோடு, ஐஏஎஸ் அதிகாரி மீது தாக்குதல் நடத்தி அவரைபணிசெய்ய விடாமல் தடுத்தவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.