புதுதில்லி:
ரபேல் ஒப்பந்த விவகாரத்தில், சிபிஐ வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று மீண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.பிரான்ஸ் நாட்டிடமிருந்து, ரூ. 58 ஆயிரம் கோடிக்கு ரபேல் ரக போர் விமானங்களை வாங்கியதில் ஊழல் நடந்திருப்பதாக குற்றச் சாட்டுக்கள் எழுந்தன. எனவே, இதுதொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மத்திய முன்னாள் அமைச்சர்கள் யஷ்வந்த் சின்கா, அருண் ஷோரி மற்றும் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆகியோர் உச்சநீதிமன் றத்தில் முறையிட்டனர். ஆனால், அவர்களின் மனுக்களை கடந்த 2018 டிசம்பர் 14 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.
ஆனால், தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி மீண்டும் அவர்கள்மனு தாக்கல் செய்தனர். இதனைவிசாரித்து, கடந்த வியாழக்கிழமையன்று தீர்ப்பளித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு:“ரபேல் ஒப்பந்தத்தில் முறைகேடுகள் நடந்திருப்பதற்கான முகாந் திரங்கள் எதுவும் இல்லை” என்று, 2018-ஆம் ஆண்டின் தீர்ப்பையே மீண்டும் உறுதிப்படுத்தியது.அதேநேரம், இத்தீர்ப்பை வழங்கிய 3 நீதிபதிகளில் ஒருவரான கே.எம். ஜோசப், தனது தீர்ப்பின் வரிகளில், “ரபேல் ஒப்பந்தவிவகாரத்தில் ஊழல் நடந்ததற் கான ஆதாரம் இருக்கும் பட்சத்தில்,மனுதாரர்கள் சிபிஐயை அணுகலாம்; சிபிஐயும், இவ்விவகாரத்தில்மத்திய அரசின் அனுமதியைப் பெற்று, வழக்கு பதிவு செய்யலாம்” என்று குறிப்பிட்டிருந்தார்.இதையடுத்து, வெள்ளிக்கிழமையன்று செய்தியாளர்களைச் சந்தித்த மனுதாரர்கள் பிரசாந்த் பூஷண், யஷ்வந்த் சின்கா, அருண்ஷோரி ஆகியோர், “ ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக, சிபிஐ எப்.ஐ.ஆர். பதிவுசெய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.