states

img

ஐபிஎல் மெகா ஏலம் தொடங்கியது  

ஐபிஎல் போட்டிக்கான மெகா ஏலம் பெங்களூரில் இன்று தொடங்கியது.  

ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் மொத்தம் பத்து அணிகள் பங்கேற்க உள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய 8 அணிகளுடன் புதிதாக லக்னோ மற்றும் அகமதாபாத் என இரண்டு புதிய அணிகள் இந்த சீசனில் இணைந்துள்ளன. ஐபிஎல் 2022 மெகா ஏலம் இன்றும் நாளையும் நடைபெறும்.  

இந்த மெகா ஏலத்திற்கு முன்னதாக ஒவ்வொரு அணியும் அதிகபட்சம் 4 வீரர்களை தக்கவைத்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. அதே நேரத்தில் புதிய அணிகள் 3 வீரர்களை தேர்வு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. அதன்படி ஏலத்தில் பங்கேற்பதற்காக பதிவு செய்த 1214 வீரர்களிலிருந்து மொத்தம் 590 வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.  

ஐபிஎல் அணிகளில் அதிகபட்சமாக பஞ்சாப் அணியிடம் ரூபாய் 72 கோடி இருப்புத்தொகை உள்ளது. வீரர்களை ஏலம் எடுக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் ரூபாய் 48 கோடி இருப்புத்தொகை உள்ளது. 14 உள்நாட்டு வீரர்கள், 7 வெளிநாட்டு வீரர்களை ஏலம் எடுக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வாய்ப்புள்ளது. இளம் வீரர் ஷாருக்கானை ஏலம் எடுக்கும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்ளது.  

மகேந்திர சிங் டோனி, ரவீந்திர ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட், மொயின் அலி ஆகியோரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தக்க வைத்துள்ளது.