மகாலிங்கபூர்:
கர்நாடகத்தில், பாஜக சட்டமன்றஉறுப்பினர் தாக்கியதில், அதே கட்சியைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண்கவுன்சிலர் ஒருவர் கருச்சிதைவுக்கு உள்ளான கொடுமை நடந்தேறியுள்ளது.
கடந்த நவம்பர் 12 அன்று கர்நாடகமாநிலம் மகாலிங்கபூரில் நகராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர்பதவிகளுக்கான தேர்தல் நடந்துள் ளது. இங்கு பாஜகவுக்கு 13 கவுன் சிலர்களும், காங்கிரசுக்கு 10 கவுன் சிலர்களும் இருந்த நிலையில், பாஜகவேவெற்றிபெறும் வாய்ப்பு இருந்தது. ஆனால், நகராட்சித் தலைவர் பதவியை எதிர்பார்த்துக் காத்திருந்த கோதாவரி பாத், சாந்தினி நாயக் மற்றும் சவிதா ஹூரகாட்லி ஆகிய 3 பாஜக கவுன்சிலர்கள் - தங்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்காததால், திடீரென காங்கிரசை ஆதரிக்க முடிவெடுத்தனர்.இதனை முன்கூட்டியே அறிந்தபாஜகவினர், அவர்களை வாக்களிக்கவிடாமல் தடுப்பது பற்றி திட்டமிட்டனர். இதற்காக பாஜக எம்எல்ஏ சித்து சாவடி தலைமையில், நகராட்சிஅலுவலகத்திற்குள் புகுந்த அவர்கள், பெண் கவுன்சிலர் சாந்தினி நாயக்கை கடுமையாகத் தாக்கியதுடன், படிக்கட்டிலும் அவரைத் தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது. நல்வாய்ப்பாக, அங்கிருந்த காவல் துறையினர்,சாந்தினி நாயக்கை மீட்டுப் பாதுகாத்துள்ளனர்.
இந்நிலையில்தான், 3 மாத கர்ப்பிணியாக இருந்த சாந்தினி நாயக், பாஜக எம்எல்ஏ-வும், அவரது ஆதரவாளர்களும் தாக்கியதில் கருச்சிதைவுக்கு உள்ளாகி இருக்கிறார். இந்தச்சம்பவம் கர்நாடகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எம்எல்ஏ சித்து சாவடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; அவரைக் கைது செய்து தண்டிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன. சாந்தினி நாயக் கின் கணவர் நாகேஷ் நாயக், தனதுமனைவியைத் தாக்கி கருச்சிதைவுக்கு உள்ளாக்கியது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக அறிவித்துள்ளார்.தனது குழந்தையைப் பறிகொடுத்துள்ள கவுன்சிலர் சாந்தினி நாயக்கும்கண்ணீர் பேட்டி ஒன்றை அளித்துள் ளார். அதில், “ஒரு எம்எல்ஏ-வே இப்படி ரவுடியிசம் செய்தால், பெண்கள்எவ்வாறு அரசியலுக்கு வருவார்கள்?பிரதமர் மோடி, பெண் குழந்தைகளைபடிக்க வைப்போம்; பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம் (பேட்டி பச்சாவோ, பேட்டி பத்தாவோ) என்கிறார். இதுதான் பெண்களுக்கான பாதுகாப்பா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.இதனிடையே, சாந்தினி நாயக்,6 ஆண்டுகளுக்கு முன்பே ‘டியூபெக்டோமி’ என்ற கருத்தடை செய்துகொண்டவர் என்றும், அவரால் கருவுற்றிருக்க முடியாது; மேலும் அவர்நாடகமாடுகிறார் என்றும் பாஜக எம்எல்ஏ சித்து சாவடி பழிபோட்டுள்ளார்.