அனந்தபூர் மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடம் இடிந்து விழுந்ததில் 2 குழந்தைகள் உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் கதிரி நகரில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடம் இன்று இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கிய ஒரு பெண் மற்றும் 2 குழந்தைகள் உடல்களை மீட்பு படையினர் மீட்டுள்ளனர். மேலும் 6 பேர் உயிருடன் சிக்கி இருப்பதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து நகராட்சி பணியாளர்கள், காவல்துறை, தீயணைப்புத் துறையினர் சேர்ந்த மீட்புப் பணியாளர்கள் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். கட்டிடம் இடிந்து அடுத்தடுத்து 2 வீடுகள் மீது விழுந்ததில் அப்பகுதியில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.