states

img

தேச துரோகச் சட்டத்தில் எம்.பி. கைது....

ஹைதராபாத்:
ஆந்திர முதல்வரும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டிக்கு எதிராகத் தொடர்ந்து கருத்துகளைக் கூறி வந்த அந்தக் கட்சியின்மக்களவை எம்.பி. கண்ணுமுரி ரகுராம கிருஷ்ணம் ராஜுதேச துரோகச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து சிஐடி போலீஸ் தலைமை அதிகாரியும், குண்டூர் கூடுதல் எஸ்.பி.யுமான ஆர்.விஜயா பால்கூறுகையில், “ஆந்திர அரசுக்கு எதிராகவும், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு எதிராகவும் எம்.பி. ராஜுதொடர்ந்து கருத்துகளைக் கூறியதற்கு ஆதாரங்கள்உள்ளன. அதுமட்டுமல்லாமல், இரு பிரிவினருக்கு இடையே மோதலைத் தூண்டும் வகையில் பேசியது, அரசின் உயர் பதவியில் இருப்போர் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துவது போன்ற பிரிவுகள் மீது 
வழக்குப்பதிவு செய்து தேச துரோகச் சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளோம்” என்று தெரிவித்தார்.