கோதாவரி எக்ஸ்பிரஸ் ரயில் தெலங்கானா மாநிலம் பி.பி.நகர் அருகே தடம் புரண்டதால் புரண்டதால் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.
ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து செகந்திராபாத் சென்று கொண்டிருந்த கோதாவரி எக்ஸ்பிரஸ் ரயில், தெலங்கானா மாநிலம் பி.பி.நகர் அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. ரயிலின் 6 பெட்டிகள் தடம் புரண்ட நிலையில், பயணிகள் அச்சமடைந்தனர். இந்த விபத்தில், நல்வாய்ப்பாக உயிர்ச் சேதம் இல்லை என ரயில்வே நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. இதன் காரணமாக அவ்வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.