states

img

காங்கிரஸ் எம்எல்ஏ கைது

கடந்த ஜூலை 31 அன்று ஹரியானாவின் ‘நூஹ்’ மாவட்டத்தில் விஎச்பி-யின் துணை தீவிர அமைப்பான பஜ்ரங் தள் அரங்கேற்றிய வன்முறையில், மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள் மணிப்பூர் போல வன்முறை பூமியாக மாறியது.  இந்த வன்முறை யில் 5 பேர் உயிரிழந்த நிலையில், பலர் படுகாய மடைந்தனர். இஸ்லாமியர்களின் வீடு, கடைகள் தீயிட்டு எரிக்கப்பட்டது.  ஹரியானாவில் கலவரத்தை கட்டுப்படுத்துகிறோம் என்ற பெயரில் ஆளும் பாஜக அரசு தன்பங்கிற்கு முஸ்லிம் வீடுகள், கடைகள், உணவகங்களை புல்டோசர் மூலம் தேடி தேடி இடித்துத் தரைமட்டமாக்கியது. உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு பின்னரே புல்டோசர் நடவடிக்கை நிறுத்தப்பட்டது. இந்நிலையில், ஹரியானா வன்முறையில் தொடர்பு இருப்பதாக பெரோஸ்பூர் ஜிகிரா தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ மம்மன் கானை வியாழனன்று தனிப்படை போலீசார் கைது செய்தனர். இதனால் மாநிலம் முழுவதும் மீண்டும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. 144 தடை : இணைய சேவை துண்டிப்பு மம்மன் கான் கைதை தொடர்ந்து பெரோஸ்பூர் ஜிகிரா, நூஹ் பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நூஹ் பகுதியில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வெள்ளியன்று பிரார்த்தனையை வீட்டில் வைத்தே செய்யும்படி இஸ்லாமிய மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர். அமைதி மற்றும் பொது ஒழுங்கை பாதுகாக்கும் வண்ணம் செப்.15 காலை 10 மணி முதல் செப்.16 இரவு 11.59 வரை இணைய சேவை துண்டிக்கப்படுவதாக நூஹ் மாவட்ட நிர்வாகம் அறிவித்தது.