ஹரியானா, உத்தரகண்ட், இமா சலப்பிரதேசம் ஆகிய வடமாநி லங்கள் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் ஒன் றான அசாம் என 4 மாநிலங்களில் கடந்த 24 மணி நேரத்தில் அடுத்தடுத்து நில நடுக்கம் ஏற்பட்டது. ஹரியானா மாநி லத்தில் உள்ள ரோஹ் தக்கின் கிழக்கு - தென்கிழக்கு மைய பகுதியில் 7 கிமீ தொலைவில் ஞாயி றன்று நள்ளிரவு 2.6 ரிக்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ஹரியானா மாநிலத்தின் பெரும் பாலான பகுதிகளில் உணரப்பட்டது. உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள உத்தர்காசி மாவட்டத்தில் 3.0 ரிக்டர் அள விலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இமா சலப்பிரதேசத்தின் மண்டி மற்றும் சம்பா மாவட்டங்களில் முறையே 2.8 மற்றும் 2.1 ரிக்டர் அளவுகோலில் லேசான நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன. முன்னதாக ஞாயிறன்று அதிகாலை அசா மின் துப்ரி மாவட்டத்தில் 3.1 ரிக்டர் அள விலான நிலநடுக்கம் ஏற்பட்டது. நில நடுக்க அளவுகள் லேசாக இருந்ததால் 4 மாநிலங்களிலும் லேசான நில அதிர்வு மட்டுமே ஏற்பட்டது. பாதிப்புகள் எது வும் ஏற்படவில்லை.