states

img

உ.பி. சட்டப்பேரவையில் காங். எம்எல்ஏக்கள் போராட்டம்

லக்னோ, டிச.16- லக்கிம்பூர் கெரியில் காரை ஏற்றிக் கொல்லப்பட்ட விவசாயிகளுக்கு நீதி கிடைக்க வேண்டுமெனில் ஒன்றிய உள் துறை இணையமைச்சா் பதவி யில் இருந்து அஜய் மிஸ்ராவை நீக்க வேண்டும்; அவரே தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்தி வருகின்ற னர்.  குறைந்தபட்சம் இந்த விவ காரம் குறித்து விவாதம் நடத்து வதற்காவது அரசு முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், ஒன்றிய பாஜக அரசு எதிர்க்கட்சிகளின் கோரிக் கையை ஏற்க முடியாது என்று பிடிவாதமாக உள்ளது. இத னால் ஏற்பட்டுள்ள அமளி கார ணமாக, நாடாளுமன்ற அலு வல்கள் நடைபெறாமல் தொட ர்ந்து முடங்கிக் கிடக்கின்றன. இதனிடையே, அஜய் மிஸ்ரா பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து, உத்தரப் பிரதேச சட்டப்பேரவையிலும் காங்கி ரஸ் எம்எல்ஏ-க்கள் போராட் டத்தைத் துவங்கியுள்ளனர். உத்தரப்பிரதேச பேரவை யின் 3 நாள் குளிர்காலக் கூட்டத் தொடர் புதன்கிழமை தொடங் கிய நிலையில், ஒன் றிய அமைச்சரும், உத்தரப்பிர தேசத்தைச் சேர்ந்தவருமான அஜய் மிஸ்ரா உடனடியாக விலக வேண்டும் என காங்கி ரஸ் கட்சியின் எம்எல்ஏ-க்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

;