states

img

கோட்டா பயிற்சி மையம்: தொடரும் மாணவர்கள் தற்கொலை!

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா பயிற்சி மையத்தில் மேலும் ஒரு மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தானின் கோட்டா மாவட்டத்தில் உள்ள பயிற்சி மையம் ஒன்றில், கடந்த ஓராண்டாக நீட் தேர்வுக்கான பயிற்சி மேற்கொண்டு வந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஃபௌரீத் ஹுசைன் என்ற மாணவர், தான் தங்கியிருந்த அறையில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவரின் உடலை மீட்ட போலீசார், இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த ஆண்டில் மட்டும், கோட்டா மாவட்டத்தில் நுழைவுத் தேர்வு பயிற்சி பெற்று வந்த மாணவர்கள் 28 பேர் தற்கொலை செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.