states

img

ராஜஸ்தான்: பேருந்தில் ஏற்பட்ட  தீ விபத்தில் 6 பேர் பலி

ராஜஸ்தானில் பேருந்தில் தீ  பிடித்து எரிந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை  ஏற்படுத்தி உள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜலோர் மாவட்டத்தில் உள்ள மகேஷ்பூரில் சனிக்கிழமை இரவு  10.30 மணியளவில் பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பேருந்தில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில்  6பேர் பலியாகினர். மேலும் படுகாயம் அடைந்த 17 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின்சார வயர் மீது பேருந்து உரசியதால் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.