states

img

கொல்கத்தா தீ விபத்து: 4 தீயணைப்பு வீரர்கள் உள்பட 9 பேர் பலி

கொல்கத்தாவில் கிழக்கு ரயில்வே மற்றும் தென்கிழக்கு ரயில்வே அலுவலகங்கள் அமைந்துள்ள பல அடுக்கு மாடிகளைக் கொண்ட f; தீ விபத்தில் 4 தீயணைப்பு வீரர்கள் உள்பட 9 பேர் பலியாகி உள்ளனர். 
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா நகரில் ஸ்டிராண்ட் சாலையில் உள்ள பல அடுக்கு மாடி கட்டிடம் ஒன்றின் 13 வது மாடியில்  நேற்று இரவு எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில், தீயைக் கட்டுப்படுத்த வந்த 4 தீயணைப்பு வீரர்கள், ஒரு ரயில்வே அதிகாரி, ஆர்பிஎஃப் தலைமைக் காவலர், உதவி துணை ஆய்வாளர் என 9 பேர் பலியாகினர். மீட்புப் பணியில் ஈடுபட்ட மேலும் சில வீரர்கள் காணாமல் போயிருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. அந்நிலையில் தற்போது அந்த கட்டடத்தில் தீ கட்டுப்படுத்தப்பட்டு, கட்டடம் முழுக்க குளிரூட்டும் பணி நடைபெற்று வருகிறது. தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணத் தொகையும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். மேலும் தீ விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் வழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்