திங்கள், மார்ச் 1, 2021

states

img

மேற்கு வங்கம்: பனிமூட்டத்தால் ஏற்பட்ட சாலை விபத்து - 13 பேர் பலி

மேற்கு வங்கத்தில் பனிமூட்டத்தால் ஏற்பட்ட சாலை விபத்தில் 13 பேர் பலியாகி உள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
மேற்கு வங்கம் ஜல்பைகுரி மாவட்டம் துப்குரியில் நேற்று இரவு பனிமூட்டத்தால் சாலை விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சிக்கி 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 18 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் விபத்துக்கான காரணம்குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரண தொகை வழங்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

;