states

பீமா கொரேகான் வழக்கில் கைதான சுதா பரத்வாஜ் ஜாமீனில் விடுதலை

மும்பை, டிச.9- பீமா கொரேகான் வழக்கில் கைது செய்யப்பட்ட சுதா பரத்வாஜ் மும்பை பைகுல்லா சிறையிலிருந்து ஜாமீனில் விடுதலையானார்.  பீமா கொரேகானில் நடைபெற்ற போரில், மராத்திய பேஷ்வா படை களை வெற்றிகொண்டதை மகா ராஷ்டிர மாநிலத்திலுள்ள தலித்துக்கள் கடந்த 2018 ஜனவரி 1 அன்று விழாவாக கொண்டாடினர். இந்த விழாவிற்குள் புகுந்த சாதி ஆதிக்க வெறியர்கள், தலித் மக்கள் மீது கொடூர வன்முறையைக் கட்ட விழ்த்து விட்டனர். இதில் ஒருவர் பலியானார். பலர் காயமடைந்தனர். அன்றைய ஆளும் பாஜக அரசோ, சாதி வெறியர்களை கைது  செய்யாமல், விழாவில் கலந்து  கொண்ட ஆனந்த் டெல்டும்டே, கவுதம் நவ்லகா, கவிஞர் வரவர ராவ், ஸ்டான் சுவாமி, சுதா பரத்வாஜ், வெர்னோன் கன்சால்வஸ் உள்ளிட்ட  தலித் தலைவர்கள், அறிவுஜீவி கள், மனித உரிமைச் செயற்பாட்டா ளர்களைக் கைது செய்து சிறை யில் அடைத்தது. இவர்களில் கேர ளத்தைச் சேர்ந்த ரோனா வில்சனும் ஒருவராவார். இவர்கள் கைது செய்யப்பட்டதற்கு அர சியல் கட்சிகள் மற்றும் பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர்.  மூன்றாண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள வர்களில் ஒருவரான சுதா பரத்வாஜ் பைகுல்லா சிறையிலிருந்து வியா ழக்கிழமை விடுவிக்கப்பட்டார். இவ ருக்கு மும்பை உயர் நீதிமன்றம் டிசம்பர் 1-ஆம் தேதி  ஜாமீன் வழங்கியது. இவர் 2018 ஆகஸ்ட் 28 ஆம் தேதி பரிதாபாத்தில் உள்ள அவரது இல்லத்தில் கைது செய்யப்பட்டார்.  சுதா பரத்வாஜ் ஏற்கனவே இருக்கும் நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம்,  மற்றும் நுரையீரல் காசநோய் ஆகியவற்றால் அவதிப்பட்டுவந்தார்.

;