states

img

மிசோரம் கல்குவாரி விபத்து - 8 தொழிலாளர்கள் பலி

மிசோரம் மாநிலம் மவுடார் பகுதியில் உள்ள கல்குவாரியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 8 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 4 பேரை தேடும் பணிகள் நடந்து வருகிறது.
மிசோரம் மாநிலம் ஹனத்தியால் மாவட்டம் மவுடார் பகுதியில் ஏபிசிஐ இன்பிராஸ்டிரக்சர் நிறுவனம், கல்குவாரியை குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகிறது. இந்தக் கல்குவாரியில் நேற்று பிற்பகல் 30-க்கும் அதிகமான தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட நிலச்சரிவில் சுமார் 12 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். இவர்களில் 8 பேர் ஒப்பந்த தொழிலாளர்கள், 4 பேர் ஏபிசிஐ ஊழியர்கள் எனத் தகவல் வெளியாகி உள்ளது. 
தகவல் அறிந்து விரைந்த தேசிய மீட்புப்படையினர், மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை, உயிரிழந்த நிலையில் 8 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. மேலும், 4 பேரை தேடும் பணிகள் நடந்து வருகிறது.