போபால்:
யாகங்கள் நடத்துவதன் மூலம் கொரோனா தொற்றுப் பரவலின் 3-ஆவதுஅலையைத் தடுக்கலாம் என்று மத்தியப் பிரதேச மாநில பாஜக அமைச்சர் உஷாதாக்குர் கூறியுள்ளார்.
‘சுற்றுச்சூழலை மேம்படுத்த யாகங் களை 4 நாட்களுக்கு நடத்துங்கள். இது‘யக்ஞ சிகிச்சை’ ஆகும். ஆதிகாலங் களில் நம் மூதாதையர்கள் பெருந்தொற் றுக்களை ஒழிக்க இதுபோன்ற யாகங் களைத்தான் நடத்தினர். இது மதவெறியோ, சடங்கோ அல்ல.ஒவ்வொருவரும் இவ்வாறு யாகம் வளர்த்தால், கொரோனாவின் மூன்றாவது அலை இந்தியாவை எட்டிக்கூட பார்க்காது’ என்று உஷா தாக்கூர் கூறியுள்ளார்.கொரோனாவை ஒழிக்கிறேன் என்று கூறி, இதற்கு முன்பு இந்தூர் விமான நிலையத்தில் யாகம் நடத்தியவரும் இதே உஷாதாக்கூர்தான். முகக் கவசம் அணியமாட்டேன் என்று பிடிவாதம் காட்டிய இவர், கொரோனா சிகிச்சை மையத்திற் கும் முகக் கவசம் அணியாமல்தான் சென்றார்.
கொரோனா தொற்றில் இருந்து பாதுகாப்புப் பெற வேதம் சார்ந்த வாழ்க்கை முறைக்கு மாற வேண்டும் என்று கூறியிருந்த உஷா தாக்குர், சாண வறட்டியைநெருப்பில் இட்டு எரித்தால் 12 மணி நேரத்துக்கு வீடு தூய்மையாக இருக்கும் என் றும் கதையடித்து இருந்தார்.