60 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து 7 வயது சிறுவன் உயிரிழப்பு.
மத்திய பிரதேசம் மாநிலத்தில் செவ்வாய்கிழமை காலை 11 மணியளவில் 60 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 7 வயது சிறுவன் 43 அடியில் சிக்கியுள்ளான். 24 மணி நேர மீட்பு பணிக்கு பிறகு இன்று மீட்கப்பட்ட நிலையில் அருகிலிருந்த அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டான் ஆனால் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சிறுவனை மீட்பதற்காக 60 அடி அழ்ழ்துளை கிணற்றுக்கு அருகிலேயே 50 அடிக்கு குழி தோண்டப்பட்டது.