states

img

கடும் வெயிலில் 5 கி.மீ. பேரணி

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் வீட்டுமனை பிரச்சனையை தீர்க்க வலியுறுத்தி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடும் வெயிலில் ஐந்து கிலோமீட்டருக்கும் அதிகமான தூரம் பேரணியாகச் சென்று  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு  ஆர்ப்பாட்டம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்தி பிறகு கோரிக்கை மனு அளித்தனர். இந்த பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க இணைச் செயலாளர் விக்ரம் சிங், மாநிலத் தலைவர் ராம் பாபு ஜாதவ் ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர்.