ஒமிக்ரான் தொற்று தொடர்ந்து அதிகரித்தால் பள்ளிகள் மூடப்படும் என்று மகாராஷ்டிர பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா கண்காணிப்பு, கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துமாறும், தேவைக்கேற்ப இரவு நேர ஊரடங்கை அமல்படுத்துமாறும் மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளிடம் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் கொரோனா தொற்று தற்போது வெளிநாடு செல்லாதவர்களுக்கும் உறுதி செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிரத்தில் மட்டும் 54 பேருக்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது.
இதையடுத்து மகாராஷ்டிர பள்ளி கல்வித்துறை அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் புதனன்று பேசுகையில், “ஒமிக்ரான் பரவலை கண்காணித்து வருகிறோம். தொடர்ந்து அதிகரித்தால் பள்ளிகள் மூடப்படும் என்றார்”.