states

img

ரம்மி விளையாடிய அமைச்சருக்கு விளையாட்டுத் துறை!

மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் ரம்மி விளையாடிய அமைச்சர் மாணிக்ராவ் கோகட்டேவை வேளாண் துறையில் இருந்து விளையாட்டுத் துறைக்கு மாற்றி கடும் நடவடிக்கை எடுத்துள்ளது அம்மாநில பாஜக அரசு.
மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்ட மன்றக் கூட்டத் தொடரின்போது அம்மாநில வேளாண் துறை அமைச்சர் மாணிக்ராவ் கோகட்டே தனது மொபைல் போனில் ரம்மி விளையாடிக் கொண்டிருந்தார். இதுதொடர்பாக தேசியவாத காங்கிரஸ் (சரத்) சட்டமன்ற உறுப்பினர் ரோஹித் பவார் இரண்டு வீடியோக்களை சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டு அம்பலப்படுத்தினார். இதனை தொடர்ந்து தற்போது, அமைச்சர் மாணிக்ராவ் கோகட்டேவை வேளாண் துறையில் இருந்து விளையாட்டுத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அதேபோல், விளையட்டுத்துறை அமைச்சராக இருந்த தத்தாத்ராய பரனே, வேளாண் துறை அமைச்சராக நியமனமிக்கப்பட்டுள்ளார்.