states

img

மும்பை: 11 மாதத்தில் 928 பேர் தற்கொலை 

மும்பையில் 11 மாதத்தில் 928 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கடந்த ஜனவரி மாதம் முதல் நவம்பர் மாதம் வரை 928 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தற்கொலை செய்து கொண்டவர்களில் 90 பேர் மூத்த குடிமக்கள். 19 முதல்30 வயதுக்குட்பட்டவர்கள் அதிக அளவில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். பொதுமுடக்க காலத்தில் மட்டும் மொத்தம் 371 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என காவல்துறை வெளியிட்டுள்ள தரவுகளில் தெரியவந்துள்ளது. 
கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட வறுமை, தனிமை உள்ளிட்ட பல காரணிகள் இளைஞர்களின் தற்கொலைக்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

;