பெங்களூரு, செப்.13- கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய தடை விதித்த கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களில் மனுதாரர்களின் வாதங்களை இந்த வாரத்தில் முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் புதன்கிழமை தொடரும். இந்த வழக்கை கடந்த வாரம் விசாரித்த நீதிபதி ஹேமந்த் குப்தா தலைமையிலான அமர்வு, சீக்கியர்கள் அணியும் தலைப்பாகையுடன் ஹிஜாப்பை ஒப்பிட முடியாது என்று சுட்டிக் காட்டியிருந்தது.