கர்நாடகாவில் முக்கிய பிராந் திய கட்சியான மதச்சார் சற்ற ஜனதா தளம் (ஜேடிஎஸ்) கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடாவின் மூத்த மகனும், ஜேடிஎஸ் எம்எல்ஏ வுமான ரேவண்ணாவின் மகன் பிரஜ்வல் ரேவண்ணா (ஹாசன் தொகுதி சிட்டிங் எம்பி). இவர் கர் நாடகாவில் நடைபெற்ற முதல்கட்ட மக்களவை தேர்தலில் ஹாசன் தொகுதியின் பாஜக கூட்டணி வேட் பாளராக களமிறங்கியுள்ளார்.
இந்நிலையில், பிரஜ்வல் ரேவண்ணா தன்னிடம் உதவி கேட் டும், வேலைக்கான ஆணை வழங்க உதவுமாறு வந்த பெண்களை மயக்கியும், அதிகாரத்தை வைத்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய் தார் என்ற குற்றச்சாட்டுடன், “பிரஜ் வல் ரேவண்ணாவின் பாலியல் வக்கிரங்கள்” என்ற பெயரில் ஏப்ரல் 25 அன்று 300 ஆபாச வீடியோக்கள் கர்நாடக மாநிலத்தில் உள்ள வாட்ஸ் அப் குரூப்களில் வைரலானது. கர் நாடகாவில் முதல்கட்ட தேர்தல் தொடங்க ஒருநாளுக்கு முன்னர் பிரஜ்வல் ரேவண்ணாவின் வீடி யோக்கள் வெளியான நிலையில், பாஜக - ஜேடிஎஸ் கூட்டணி அதிர்ச்சி யில் உறைந்தனர். அடுத்த 48 மணி நேரத்தில் பிரஜ்வல் ரேவண்ணா வின் 2800க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் நாடு முழுவதும் பரவியது. இதனையடுத்து ஹாசன் தொகுதி வேட்பாளரான பிரஜ் வல் ரேவண்ணா தலைமறைவா னார். தற்போது அவர் ஐரோப்பா நாடான ஜெர்மனியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலை யில், மாநில மகளிர் ஆணையத்தின் பரிந்துரையின் பேரில் இந்த விவகா ரத்தை விசாரிக்க சிறப்பு புலனாய் வுக் குழுவை அமைத்துள்ளது கர் நாடக அரசு. மேலும் புகாரின் பேரில் பிரஜ்வல் ரேவண்ணா மீது நரசிபூரா காவல்நிலையத்தில் 4 பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள் ளனர்.
மாநிலம் முழுவதும் பெண்கள் போராட்டம்
இந்நிலையில், பலரது பெண் களின் வாழ்க்கையை சீரழித்த ஜேடிஎஸ் எம்பி பிரஸ்வல் ரேவண்ணாவை கைது செய்யக் கோரி மாநிலம் முழுவதும் பெண் கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்ற னர். பெங்களூரில் காங்கிரஸ் கட்சி யினர், மகளிர் அமைப்பினரும் இணைந்து பிரஜ்வல் ரேவண்ணா வின் உருவப்படத்தை செருப்பை வைத்து அடித்தும், தீயிட்டுக் கொளுத்தியும் தங்களது கண்ட னத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
பிரஜ்வால் ரேவண்ணாவை பாஜக பாதுகாக்கிறது
பாலியல் குற்றவாளி பிரஜ்வல் ரேவண்ணாவை பாஜக பாதுகாப்பதாக கர்நாடக பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சர் லக்ஷ்மி ஹெப்பால்கர் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: “மதச்சார்பற்ற முன்னணி தலைவர்களில் ஒருவரான பிரஜ்வல் ரேவண்ணாவால் 16 வயது சிறுமிகள் முதல் 60 வயது வரையிலான நூற் றுக்கணக்கான பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளனர். இதில் தலித் மற்றும் பழங்குடியினப் பெண்கள், கூலி பெண் தொழிலாளர்கள், பணிப்பெண்கள், போலீஸ் அதிகாரிகள் மற்றும் அங்கன்வாடி பணியாளர் களும் பிரஜ்வல் ரேவண்ணாவின் பாலியல் வன் கொடுமைக்கு இரையாகியுள்ளனர். இந்த விவ காரம் தொடர்பாக உள்நாட்டில் மட்டுமின்றி சர்வ தேச அளவில் கூட எனக்கு அழைப்பு வருகிறது. இந்துப் பெண்களின் தாலியை பாதுகாப்பது பற்றிப் பிரதமர் மோடி பேசி வருகிறார்? ஆனால் தனது கூட்டணிக் கட்சியின் பாலியல் வக்கிரங்களுக்கு என்ன சொல்லப் போகிறார்? அரசியல் ஆதா யத்திற்காக பிரஜ்வல் ரேவண்ணாவை பாஜக தலைமை பாதுகாக்கிறது. இது உலகின் மிகப பெரிய பாலியல் வன்கொடுமை நிகழ்வாக உள்ள நிலை யில், பிரஜ்வல் ரேவண்ணாவின் விவகாரம் தொடர் பாக பாஜக தங்களது நிலைப்பாட்டை தெளிவு படுத்த வேண்டும். இவ்வளவு பெரிய பாலியல் வன் முறை அம்பலப்படுத்தப்பட்ட போதிலும் பாஜக - ஜேடிஎஸ் கூட்டணியைத் தொடருவார்களா? என்ற பலத்த சந்தேகம் வலுவாக கிளம்பியுள்ளது” என அமைச்சர் லக்ஷ்மி ஹெப்பால்கர் கூறியுள்ளார்.
தேவகவுடா மகன் மீதும் பாலியல் குற்றச்சாட்டு
பிரஜ்வல் ரேவண்ணா போன்றே அவரது தந்தையும் ரேவண்ணாவும் தன்னை கொடுமைப்படுத்தி பாலி யல் பலாத்காரம் செய்ததாக, ரேவண்ணாவின் வீட்டில் பணி புரிந்த பணிப்பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்துள் ளார். தந்தையும், மகனும் வீட்டில் இல்லாத நேரங்களில் கட்டாயமாக மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், தன்னுடைய வீட்டிற்கு சென்றாலும் வீடியோ கால் மூலம் ஆபாச செயல்கள் மூலம் தொல்லைகள் கொடுத்ததாக வும் ரேவண்ணாவின் வீட்டுப் பணிப்பெண் தனது வாக்கு மூலத்தில் கூறியுள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் நரசி பூரா காவல்நிலையத்தில் பிரஜ்வல் ரேவண்ணாவுடன் அவரது தந்தை ரேவண்ணா மீதும் 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
300 பெண்கள்; 2,800 வீடியோக்கள்; 800 பென்டிரைவ்
ஜேடிஎஸ் எம்பி பிரஜ்வல் ரேவண்ணா வின் பாலியல் வன்கொடுமைகள் தொடர்பாக முதலில் 300 ஆபாச வீடியோக்கள் மட்டுமே வெளியானதாக தகவல் வெளியானது. ஆனால் உண்மையில் பிரஜ்வல் ரேவண்ணா 300 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், இதுதொடர்பாக 2,800 வீடி யோக்கள் அடங்கிய 800 பென்டிரைவ் கைப் பற்றப்பட்டுள்ளதாகவும் மேலும் ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இது டிரைலர் என்றும், பாதிக்கப்பட்ட பெண்களின் எண் ணிக்கையை இன்னும் முழுமையாக கணக்கி டப்படவில்லை என்பதால், மேற்குறிப்பிட்ட எண்ணிக்கையை விட பாதிக்கப்பட்ட பெண் களின் எண்ணிக்கை மற்றும் ஆபாச வீடி யோக்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சமூக வலைதள புலனாய்வுப் பிரிவு ஊடகங்கள் தகவல் தெரி வித்துள்ளன.
எங்களுக்கு முன்பே தெரியும்; நழுவும் பாஜக
பிரஜ்வல் ரேவண்ணாவின் பாலியல் விவகாரம் முன்கூட்டியே தெரியும் என்றும், இதுதொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் பி.ஒய்.விஜயேந்திராவுக்கு கடி தம் எழுதியதாகவும், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மைசூரு விஜ யத்தின் போது இந்த விஷயத்தை கவ னத்திற்கு கொண்டு சென்றதாகவும் ஹாச னைச் சேர்ந்த பாஜக தலைவர் தேவராஜ் கவுடா கூறியுள்ளார். பிரஜ்வல் ரேவண் ணாவின் பாலியல் விவகார வீடியோ வெளியானது ஒருபக்கம் என்றால், பாதிக் கப்பட்ட பெண்களின் நிலைமை உள் ளிட்ட அனைத்து விவரங்களையும் அம் பலப்படுத்தியது மாநில மகளிர் ஆணை யம் என்ற நிலையில், வெறுமனே சாக்குப் போக்கு சொல்லி இந்த விவகாரத்தில் இருந்து பாஜக தப்பிக்க முயலுகிறது.