பெங்களூரு, டிச.23- கர்நாடகத்தில், கட்டாய மத மாற்றத் தடைச் சட்ட மசோதா-வை ஆளும் பாஜக அரசு கொண்டு வந் துள்ளது. காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக எதிர்த்த போதும், “கட்டாய மதமாற்ற தடைச் சட்டம் அவசியமானது. கலாச் சார பின்னணியை மாற்றும் கவர்ச்சி கரமான முயற்சிகளைத் தடுக்க இந்த சட்டம் முக்கியமானது” என்று கூறி, முதல்வர் பவசராஜ் பொம்மை பிடி வாதமாக இந்த சட்டத்தைக் கொண்டு வந்துள்ளார். “மாவட்ட ஆட்சியரின் அனுமதி இல்லாமல் மதம்மாற முடியாது. மதம் மாறும் பட்சத்தில், அதற்கு முன்பு பெற்ற இடஒதுக்கீடு உள்ளிட்ட அனைத்து சலுகைகளும் திரும்பப் பெறப்படும். சட்டவிரோதமாக மதம் மாறினாலோ, மதம் மாற்றினாலோ அவர்களுக்கு 3 முதல் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்படும். சிறுவர்கள், பெண்கள், பட்டியல் வகுப்பினர் மற்றும் பழங்குடியினரை மதம் மாற்றினால் 3 முதல் அதிக பட்சம் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண் டனையை அனுபவிக்க வேண்டும்” என்று கடுமையான தண்டனை வழங் கும் பிரிவுகள் இந்த சட்டத்தில் இடம் பெற்றுள்ளன.
இதையடுத்து, கர்நாடக பாஜக அர சின் இந்த சட்டத்திற்கு எதிராக பெங்க ளூரு உள்பட கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மக்கள் போராட் டத்தில் இறங்கியுள்ளனர். கிறிஸ்தவ அமைப்புக்கள் மட்டுமன்றி, பெண்கள் அமைப்புகள், வழக்கறிஞர்கள், கல் லூரி மாணவர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். புதனன்று பெங்களூருவில் நடை பெற்ற போராட்டத்தில் பேசிய ஆர்ச் பிஷப் பீட்டர் மசோடா, “கர்நாடக அர சின் மசோதாவில் ஆபத்தான அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இது கிறிஸ்தவர்களை மட்டும் பாதிக்காது. பெரும்பான்மை சமூகங்களையும் பாதிக்கும். அதனால்தான் கிறிஸ்த வக் குழுக்கள் மட்டுமன்றி, 40-க்கும் மேற்பட்ட ஜனநாயக இயக்கங்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண் டுள்ளன. இந்த சட்டத்தின் ஆபத்து குறித்து நாங்கள் மாநில அரசை சந்தித்துப் பேச முயற்சித்தோம்.
ஆனால், எங்களின் கோரிக்கை களுக்கு அரசு செவி சாய்க்கவில்லை” என்று குற்றம் சாட்டியுள்ளார். மேலும், “கர்நாடகம் மற்ற மாநி லங்களில் இருந்து கெட்ட விஷயங் களை எடுத்து அமல்படுத்தக்கூடாது. கர்நாடகா ஒரு வளர்ந்த மற்றும் முற்போக்கான மாநிலம். கர்நாடகா தனியுரிமை, கண்ணியத்திற்கு முன்னு தாரணம். அதனை சீர்குலைத்து விடக் கூடாது” என்றும் அவர் குறிப்பிட்டுள் ளார். இவ்வாறு போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கும் நிலையில், தெற்கு கர்நாடகம் சிக்கபல்லபூர் மாவட்டத் தில் உள்ள 160 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித ஜோசப் தேவால யத்தில் உள்ள புனித அந்தோணியார் சிலையை சமூக விரோதிகள் சிலர் தாக்கி சேதப்படுத்தியுள்ளனர்.