பெங்களூரு, மார்ச் 6 - “எனது அரசியல் வாழ்க்கையில் நரேந்திர மோடியை போன்ற பிரதமரை பார்த்தது இல்லை” என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடுமையாக சாடியுள்ளார். “பாஜக எம்எல்ஏ (மதல் விருபாக் சப்பா) மகன் வீட்டில் கோடிக்கணக்கான பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகா ரத்தில் அமலாக்கத் துறை, வருமான வரித் துறையெல்லாம் எங்கே போனது?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். கர்நாடக மாநிலம் துமகூரு மாவட் டம் கொரட்டகெரேயில் ஞாயிற்றுக் கிழமையன்று நடைபெற்ற ‘மக்கள் குரல்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, மல்லிகார்ஜுன கார்கே உரையாற்றி யுள்ளார். அப்போது அவர் பேசி யிருப்பதாவது: “பாஜக-வினர் அனைவரையும் மிரட்டி, ஆட்சி நடத்தி வருகின்றனர். கர்நாடகத்திற்கு பேரவைத் தேர்தல் வருவதால் பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா ஆகியோர் அடிக்கடி கர்நாட கம் வருகின்றனர். கர்நாடகத்தில் பாஜக அரசு எதிர்கொண்டுள்ள 40 சத விகித கமிஷன் மற்றும் ஊழல் குற்றச்சா ட்டுகள் குறித்து பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் என்ன சொல்லப் போகிறார்கள்? உங்களுக்குக் கீழே ஊழல் நடந்துள் ளது, ஆனால் நீங்கள் அதைப் பார்க்க மறுக்கிறீர்கள்.
பாஜக எம்எல்ஏ மகன் வீட்டில் சட்ட விரோதமாக சம்பாதித்த கோடிக் கணக்கான பணம் பறிமுதல் செய்யப் பட்டுள்ளது. இதுகுறித்து பாஜக தலை வர்கள் பேசாமல் அமைதியாக இருக் கிறார்கள். இதுகுறித்து விசாரிக்க வேண்டிய அமலாக்கத் துறையும், வரு மானவரித் துறையும் எங்கேபோனது? கர்நாடகத்தில் பாஜக-வின் மற்ற முறைகேடுகள் மற்றும் திட்டங்களில் 100 சதவிகிதம் ஊழல் நடந்துள்ளது. ஒன்றிய அரசுத் துறைகளில் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. கர்நாடகத்தில் மட்டும் 3 லட்சம் பணியிடங்கள் காலி யாக வைக்கப்பட்டுள்ளன. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்ட எரி வாயு பொருள்களின் விலைகளை அவர்கள் உயர்த்தி விட்டனர். இதனால் நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளனர். மக்களின் வளர்ச்சி மற்றும் நலனைப் பேசுவதற்குப் பதிலாக பள்ளி களில் என்ன ஆடைகள் அணிய வேண்டும்,
உணவுப் பழக்கம் என்ன வாக இருக்க வேண்டும் என்பதே பாஜக- வினருக்கு முக்கியப் பிரச்சனையாக உள்ளது. பாஜக-வினர் அரசியல் சாசனத்தை தவறாக பயன்படுத்து கிறார்கள். சமூகத்தில் பிளவை ஏற்படு த்துகின்றனர். இந்து - முஸ்லிம்களுக்கு இடையேயும், பல்வேறு சாதியினரிடை யேயும் மோதல்களைத் தூண்டி வருகின்றனர். நாட்டில் 60 சதவிகிதம் மக்கள் மோடிக்கு எதிராக உள்ளனர். எனது 52 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் மோடியை போன்ற மோசமான பிரதமரை பார்த்தது இல்லை. எங்கு சென்றாலும் காங்கிரஸ் தலைவர்களை குறை சொல்வதே அவரது வேலையாக உள்ளது. அரசின் பணம், கார் மற்றும் விமானத்தைப் பயன்படுத்தி, நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபடுவதற்குப் பதிலாக, என்னைப் போன்றவர்களை விமர்சிப்பதுதான் ஒரு பிரதமரின் வேலையா? எங்கு சென்றாலும் காங்கிர சை விமர்சிப்பதைத் தவிர,நாட்டிற்காக பிரதமர் மோடி என்ன செய்தார்..? வரும் நாள்களில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக வுக்கு எதிராக ஒருங்கிணைந்த போராட்டத்தை நடத்த, நாட்டில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளை ஒன்றிணைக்க காங்கிரஸ் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும்.இவ்வாறு மல்லிகார்ஜூன கார்கே பேசியுள்ளார்.