states

வெள்ளப் பாதிப்பு தடுப்புக் கூட்டத்தில் தூங்கிய கர்நாடக பாஜக அமைச்சர்!

பெங்களூரு, செப்.7- கர்நாடகத்தில் பெங்களூரு, மைசூரு, ஹாசன், மண்டியா உள்பட 15-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கனமழை-வெள்ளம் ஏற்பட்டு மக்க ளின் அன்றாட வாழ்க்கை கடுமை யாக பாதிக்கப்பட்டுள்ளது. குடியிருப்புகள், அலுவலகங் களை வெள்ளம் சூழ்ந்திருப்பதுடன், சாலைகளிலும் 4 அடி உயரத்திற்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. போக்குவரத்துச் சேவைகள் முடங்கி யுள்ளன. மின்சாரம், குடிநீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முதல்வர் பசவராஜ்பொம்மை தலைமையில் பெங்களூரு விதான சவுதாவில், மாவட்ட ஆட்சியர்கள், அரசு அதி காரிகள் கலந்து கொண்ட மழை-வெள்ள பாதிப்பு தொடர்பான ஆலோ சனைக் கூட்டத்தில், வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.அசோக் தூங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.அசோக், தலையைக் கையால் தாங்கியபடி கண்ணை மூடித் தூங்கும் வீடியோவும் வெளியான நிலை யில், பலரும் அவருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். “பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் மழை-வெள்ளத்தால் தத்தளிக்கிறது. மாநில மக்கள் மழை யால் சோகத்தில் மூழ்கியுள்ளனர். ஆனால், மழை-வெள்ள பாதிப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறார்.  முக்கியமான கூட்டத்தில் வருவாய்த்துறை அமைச்சர் இவ்வாறு இருப்பது கண்டித்தக்கது. கவலையே இல்லாதவர்தான் இப்படி நடந்து கொள்ள முடியும்” என்று காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. மேலும், “பெங்களூருவை உலகத்தரத்திற்கு மாற்றுவோம் என்று கூறிய பாஜக-வினர் தற்பொது பெங்களூருவை நீரில் மூழ்கும் நகரமாக மாற்றி விட்டனர். பாஜக ஆட்சியில் பெங்களூரு அழிந்து விட்டது. மழையால் தற்போது பெங்களூருவில் நிலவும் நிலைக்கு பாஜகவும், அதன் முதல்வருமே பொறுப்பு” என்றும் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

;