states

img

பெங்களூரில் தொடரும் மழை - வெள்ளம் குடிநீர் தட்டுப்பாடு, கொள்ளை லாபம் பார்க்கும் விடுதிகள்

பெங்களூரு, செப்.7-  வரலாறு காணாத மழை யால் பெங்களூரு மாநகரமே வெள்ளத்தில் மிதக்கிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் செவ்வாயன்று இரவு வரை விடிய, விடிய கனமழை கொட்டித் தீர்த்தது.  எதிர்பாராத திடீர் மழை வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து ஐடி நிறு வனங்களுடன் புதனன்று கர்நாடக அமைச்சர் சி.என்.அஸ்வத்நாராயணன் ஆலோசனை நடத்துகிறார்.  இந்தியாவின் ஐடி ஹப் என அறியப்படும் பெங் களூருவில் பெரிய நிறு வனங்கள் பலவும் இயங்கு கின்றன.  இந்நிலையில், இரண்டு நாட்களாக நகரின் பல பகுதிகள் மழை, வெள்ளத் தால் ஸ்தம்பித்துள்ளதால் ஐடி தொழில் முடங்கி யுள்ளது.  சில நிறுவனங்கள் ஊழி யர்களை வீட்டில் இருந்து  பணி செய்ய அனுமதித்தா லும் கூட இணைய வசதி முடக்கம், மின் இணைப்பு துண்டிப்பு பிரச்சனைகளால் பணிகள் முடங்கியுள்ளதாக ஐடி நிறுவனங்கள் தெரி வித்துள்ளன.  பெங்களூருவின் பல் வேறு பகுதிகளிலும் மின் தடை இன்னும் சீரமைக்கப் படவில்லை.  குறிப்பாக வெள்ளம் அதிகம் சூழ்ந்துள்ள பகுதி களில் மின் விநியோகம் முன் னெச்சரிக்கை நடவடிக் கையாக தடை செய்யப் பட்டுள்ளது.  மின்சாரம் இல்லாததால் குடிநீர் விநியோகமும் தடை செய்யப்பட்டுள்ள நிலை யில் சில இடங்களில் மாநக ராட்சியே போர்வெல் இயந்தி ரங்கள் கொண்டு சென்று சில பகுதிகளில் குடிதண்ணீர் விநியோகம் செய்து வரு கிறது.  டேங்கர்கள் மூலம் தண் ணீர் விநியோகமும் செய்யப் படுகிறது. இதற்கிடையில் பெங்க ளூரு ஐடி நிறுவனம், பெரும் பணக்காரர்கள் வாழும் பகுதிகளை சுற்றியிருக்கும் விடுதிகளில் வாடகையாக பெரும் தொகையை வசூலிப்  பதாகவும் புகார்கள் எழுந் துள்ளன. 4 பேர் கொண்ட ஒரு குடும்பம் ஓரிரவு மட்டும் தங்க ஏர்போர்ட் சாலையில் உள்ள ஒரு விடுதியில் ரூ.42,000 வசூலிக்கப்பட்ட தாக புகார் எழுந்துள்ளது. 

;