states

கேப்டன் வருண்சிங் உயிரிழப்பு

பெங்களூரு, டிச.15- குன்னூர் அருகே நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் காய மடைந்து சிகிச்சை பெற்றுவந்த கேப்டன் வருண்சிங் புதனன்று உயிரிழந்தார்.  குன்னூர் ராணுவ மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த கேப்டன் வருண் சிங், மேல் சிகிச் சைக்காக பெங்களூரு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவர் 80 சதவீத தீக்காயத்துடன் சிகிச்சை பெற்று வந்தார்.  ஆனால் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். சிகிச்சை பல னின்றி கேப்டன் வருண் சிங் உயிரி ழந்திருப்பது நாட்டு மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் இரங்கல் குரூப் கேப்டன் வருண் சிங்கை இழந்து வாடும் அவரது குடும்பத்தி னருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக பிரதமர் மோடி டுவீட் டர் மூலம் இரங்கல் தெரிவித்துள்ளார்.

;