மனுஸ்மிருதியை உயர்த்திப்பிடித்து அரசு விழா ஒன்றில் மத்திய உள்துறை இணை அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி பேசியிருக்கிறார்.
தேசியக் குற்றப் பதிவேடுகள் பீரோ (NCRB) ஏற்பாடு செய்திருந்த மாநாடு ஒன்றில் உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு பேசியுள்ளார்.
அவர் பேசுகையில், மனுதர்மத்தில் அதை உருவாக்கிய மனு, காவல்துறையை இரண்டாகப் பிரித்திருந்தார் என்றும், ஒன்று குற்றப் புலனாய்வுத் துறை என்றும் மற்றொன்று சட்டம்-ஒழுங்கு பிரிவு என்றும் கூறியுள்ளார். மேலும் அவர் பேசுகையில், நம் இதிகாசங்களான ராமாயணமும், மகாபாரதமும் மக்களைப் பாதுகாக்க வேண்டியது அவசியம் என்று வலியுறுத்தியிருப்பதாகவும், அதனை அமல்படுத்துவதற்கு குற்றம் புரிந்தவர்களை அரசன் தண்டித்திட வேண்டும் என்று வலியுறுத்தியிருப்பதாகவும் தெரிவித்தார்.
(ந.நி.)