states

img

விவசாயிகளுடனான 6ம் கட்ட பேச்சு வார்த்தை ரத்து 

விவசாயிகளுடனான 6ம் கட்ட பேச்சு வார்த்தையை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.
விவசாயிகளை வஞ்சிக்கும் வகையில் மோடி அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களையும், மின்சார திருத்த சட்டத்தையும் திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்தி தில்லியில் லட்சக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பஞ்சாப் ஹரியான உள்ளிட்ட 6 மாநில விவசாயிகள்  கடும் குளிரையும் பொருட்படுத்தாமல்  கடந்த 26ம் தேதி போராட்டத்தை தொடங்கினர். இன்று 14 வது நாளாக தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில்  விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு முழுவதும் இடதுசாரிக்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும்  போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  ஏற்கனவே மத்திய அரசுடன் நடந்த 5 கட்ட பேச்சு வார்த்தைகள் தோல்வியில் முடிந்தது. இந்நிலையில் நேற்று விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து நாடு முழுவதும் பொது வேலை நிறுத்தம் வெற்றிகரமாக நடைபெற்றது. இந்நிலையில் பஞ்சாப்பை சேர்ந்த விவசாய சங்க தலைவர்கள் 8 பேர் மற்றும் பல்வேறு விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த 13 பேர் நேற்று இரவு 8 மணிக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தனர். அந்த கூட்டத்தில் மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், உணவு துறை அமைச்சர் பியூஷ் கோயல், வர்த்தகம் மற்றும் தொழில் துறை இணை அமைச்சர் சோம் பிரகாஷ் ஆகியோரும் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் அனைத்திந்திய கிஸான் சபை பொதுச் செயலாளர் ஹன்னான் முல்லா மற்றும் பாரதிய கிஸான் யூனியன் தலைவர் ராகேஷ் தியாகத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
ஆனால் இந்த பேச்சு வார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்ட வில்லை. இந்நிலையில் இன்று நடக்கவிருந்த 6ம் கட்ட பேச்சு வார்த்தையை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இந்த தகவலை மத்திய வேளாண் துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் அறிவித்துள்ளார்.

;