states

img

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக பாரத் பந்த்: தமிழகத்தில் கடைகள் அடைப்பு

மோடி அரசு அறிமுகப்படுத்திய 3 புதிய வேளாண் திட்டங்கள் மற்றும் மின்சார திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி  இன்று 13வது நாளாக தில்லியை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மத்திய அரசுடன் நடந்த பேச்சு வார்த்தையில் தோல்வி ஏற்பட்டதையடுத்து விவசாய சங்கங்கள் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தன. 
தமிழகத்தில் திமுக, மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. கோவை, மன்னார்குடி, மதுரை, கோபிச்செட்டிபாளையம், மரக்காணம், காஞ்சிபுரத்தில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. விழுப்புரம், நீலகிரி, ஈரோடு, திருவண்ணாமலை, திருப்பூர், தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட இடங்களில் கடைகள் மூடப்பட்டுள்ளது. சத்தியமங்கலம், திருக்கோவிலூர் உள்ளிட்ட இடங்களிலும் பந்துக்கு ஆதரவாக கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. ஆர்ப்பாட்டத்தின்போது மோடி அரசின் எதேச்சதிகார நடவடிக்கைக்கு எதிராகவும், விவசாயிகளுக்கு ஆதராகவும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. 
இதேபோல் கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா,மேற்குவங்கம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலும்  கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. அங்குள்ள இடது சாரி கட்சிகள் மற்றும் விவசாய அமைப்புகள் விவசாயிகள் விரோத வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.