states

புதுவை மின்துறை ஊழியர்கள் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

புதுச்சேரி, அக்.5- புதுச்சேரி மின்துறை ஊழியர்களிடம் முதல மைச்சர் அளித்த வாக்குறுதியை ஏற்று தீபாவளி வரைக்கும் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மின்துறையை தனியார் மயமாக்கும் அரசின் முடிவை எதிர்த்து தொடர்ந்து 6 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்ட மின்துறை ஊழியர்களிடம் அக்.4 அன்று முதல மைச்சர் என்.ஆர்.ரங்க சாமி பேச்சுவார்த்தை நடத்தி னார்.மின்துறை அமைச்சர் நமச்சிவாயம், தலைமைச் செயலர் ராஜீவ்வர்மா, அரசு செயலர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த பேச்சுவார்த்தை யில் ஊழியர்கள் பொறி யாளர்களின் சார்பில் முன் வைக்கப்பட்ட  கோரிக்கை களை அரசு பரிசீலனை செய்து ஒன்றிய அரசோடு பேச்சு வார்த்தை நடத்தி உரிய முடிவை எடுப்பதாக முதல்வர் ரங்கசாமி உறுதி யளித்தார். அதுவரைக்கும் போராட்டத்தை ஒத்தி வைக்க வேண்டும் என்று ஊழியர் சங்கப் தலை வர்களிடம் முதல்வர் கேட்டுக்கொண்டார். இந்த பேச்சுவார்த்தை யில் தேசிய மின்சார வாரிய தொழிலாளர், ஊழியர் மற்றும் பொறியாளர் அமைப்புகளின் ஒருங்கி ணைப்புக் குழு அமைப்பா ளரும் சிஐடியு அகில இந்திய செயற்குழு உறுப்பி னருமான பிரசாந்த்நந்தி சவுத்ரி, தமிழ்நாடு மின்சார வாரிய மத்திய அமைப்பு தலைவர் ஜெய்சங்கர், துணைப் பொதுச் செய லாளர் ரவிச்சந்திரன், அகில இந்திய மின்சார வாரிய பொறியாளர் கூட்ட மைப்பு தலைவர் சைலேந்திரதுபே, தமிழ்நாடு மின்சார பொறியாளர் சங்கத்தின் பொதுச் செய லாளர் ஜெயந்தி, புதுச்சேரி போராட்ட குழு தலைவர்கள் அருள்மொழி,  வேல்முருகன், ஆலோசகர் ராமசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

பிறகு, போராட்டத்தில் ஈடுபட்ட மின்துறை ஊழியர் சங்கங்களின் நிர்வாகிகளோடு போராட்ட குழுவினர் ஆலோசனை நடத்தினர். அதனைத் தொடர்ந்து காலவரையற்ற போராட்டத்தை தற்காலிக மாக தள்ளி வைப்ப தாகஅறிவித்தனர். இதுகுறித்து போராட்டக் குழு தலைவர் அருள்மொழி செய்தியாளர்களிடம் கூறு கையில்,“மின்துறை தனி யார் மையம் குறித்தான அர சாணையில்  ஊழியர்கள் பொறியாளர்களுக்கான பணி பாதுகாப்பு, மின் துறையின் அரசு பங்கு  51 விழுக்காடும், தனியாருக்கு  49 விழுக்காடு என்ற முறையை பின்பற்று வதற்கான வழிமுறையை அரசு ஆராய வேண்டும் என்றும்   ஊழியர்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டது. இந்தக் கோரிக்கைகள் அனைத்தும் ஒன்றிய அரசோடு பேச்சுவார்த்தை நடத்தி உரிய திருத்தங்கள் கொண்டுவர நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் ரங்க சாமி உறுதி அளித்துள்ளார். முதல்வரின் உத்தர வாதத்தை ஏற்று நாங்கள் பணிக்கு திரும்பு கிறோம். வரும்  தீபாவளி பண்டிகை வரை எங்க ளது போராட்டத்தை தற்காலி கமாக ஒத்தி வைக்கி றோம்”என்றார்.

;