states

img

10 மாதமாக ஊதியம் வழங்காத நிர்வாகம்: குடிசை மாற்று ஊழியர்கள் போராட்டம்

புதுச்சேரி, செப். 16- மாதந்தோறும் ஊதியம் வழங்க கோரி குடிசை மாற்று ஊழியர்கள் உள்ளி ருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். குடிசை மாற்று வாரிய அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நிலுவை யில் உள்ள 10 மாத ஊதி யத்தை உடனே வழங்க  வேண்டும், 10  ஆண்டுக ளுக்கு மேலாக பணிபுரியும் தினக்கூலி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், மாதம்  தோறும் உரிய தேதியில் ஊதி யம் வழங்க வேண்டும், ஓய்வுபெற்ற ஊழியர்க ளுக்கு பணிக்கொடை தாமத மின்றி வழங்க வேண்டும்  உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. புதுச்சேரி முல்லை நகரில் உள்ள குடிசை மாற்று வாரிய அலுவலகத்தில் நடைபெற்ற உள்ளிருப்பு போராட்டத்திற்கு, குடிசை மாற்று வாரிய ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் பழனிநாதன் தலைமை தாங்கினார். அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளன பொதுச் செயலாளர் ராதாகிருஷ்ணன், ஊழியர் சங்கத்தின் செயலாளர் கோவிந்தராசு, பொருளாளர் ஆனந்தன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.