பீகார் மாநிலத்தில் ஓடும் ஆம்புலன்சில் பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் புத்தகயா பகுதியில் ராணுவ காவல் மைதானத்தில் ஊர்க்காவல் படை தகுதி தேர்வுக்கு வந்த பெண் ஒருவர் மயங்கி விழுந்துள்ளார். தேர்வு மையத்தில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். அப்போது ஓடும் ஆம்புலன்சில் வைத்து அப்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரில், தன்னை 3-க்கும் மேற்பட்டோர் பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து, ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் மருத்துவ பணியாளர் ஆகியோரை மட்டுமே போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.